கொளுத்தும் வெயிலுக்கு இடையே குட் நியூஸ்.. முன்கூட்டியே வரும் பருவ மழை.. இந்த ஆண்டு எப்படி இருக்கும்?
சென்னை: கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே வரும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். IOD மற்றும் லா நினோ காரணமாக பருவ மழை இந்த ஆண்டு முன்கூட்டியே வர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பெரும்பாலான மாழிலங்களின் நீர் தேவையை தென் மேற்கு பருவமழைதான் தீர்த்து வைக்கிறது. ஜூன் 1 ல் கேரளாவில் தொடங்கும் தென் மேற்கு பருவமழை ஜூலை 2-வது வாரத்தில் கிட்டத்தட்ட நாடு முழுவதும் எட்டிவிடும்.

செப்டம்பர் 2-வது வாரத்தில் வடமேற்கு இந்தியாவில் இருந்து விடைபெறத்தொடங்கும் தென் மேற்கு பருவமழை, அக்டோபர் 2-வது வாரத்தில் நிறைவு பெறும். அதன்பிறகே வடகிழக்கு பருமழை பெய்யும். வடகிழக்கு பருவமழையில் அதிக மழையை பெறும் மாநிலம் தமிழ்நாடுதான். இந்த ஆண்டு கோடை வெயில் நாடு முழுவதும் உக்கிரம் காட்டி வருகிறது.
வரும் நாட்களில் வட இந்திய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என்பதால், வெயிலின் கொடூரம் இன்னும் அதிகமாகும். இதனால், வெயிலை எப்படி சமாளிக்க போகிறோம் என மக்கள் கலக்கத்துடன் உள்ளனர். இந்த நிலையில் தான் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்யத் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் இந்திய வானிலை ஆய்வு மையமும் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டு லா நினா காரணமாக பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை நிபுணர்கள் சொல்கிறார்கள். இது தொடர்பாக வானிலை நிபுணர்கள் கூறியதாவது:- இந்திய நினோ என்று அழைக்கப்படும் இந்தியப் பெருங்கடல் இருமுனையம் ( IOD) என்பது கடல் மேற்பரப்பு வெப்பநிலையின் ஒழுங்கற்ற அலைவு ஆகும், இந்த IOD மற்றும் லா நினோ காரணமாக பருவ மழை இந்த ஆண்டு முன்கூட்டியே வர வாய்ப்பு உள்ளது.
அடுத்தடுத்து ஒரே நேரத்தில் நடக்கும் இந்த நிகழ்வுகள் நாட்டின் பல பகுதிகளில் அதிக மழை பொழிவுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் வானிலை நிபுண்ர்கள் கணித்துள்ளனர். நடப்பு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதோடு, இயல்பை விட மழை அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்து இருப்பது மக்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.
மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்யும் மழையின் மூலம் குற்றால அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டும். ஆறுகள் உயிர்பெறும். நாட்டின் பெரும்பாலான பகுதியின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் மழை, கடுமையான கோடைக் காலத்திற்கு பிறகு பொழியும் மழை என பல்வேறு சிறப்புகளை கொண்டது தென்மேற்கு பருவமழை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications