அப்பதான் புதுசா வாங்கினது.. குபுகுபுன்னு பத்தி எரிஞ்சு கருகி போச்சு.. கவலையில் மணிகண்டன்!
மொபெட் பைக்கில் தீ பிடித்து எரிந்து கருகியதால் விசாரணை நடந்து வருகிறது
Recommended Video
சென்னை: அப்பதான் புதுசா பேட்டரி மொபெட் ஒன்றை வாங்கியிருந்தார் மணிகண்டன். அது என்னடான்னா.. சார்ஜர் போடும்போது வெடித்து சிதறி.. குபு குபுன்னு பத்திக்கிட்டு எரிய ஆரம்பிச்சிடுச்சு!
சென்னை மாங்காடு, அம்பாள் நகர், குபேரன் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயசு 32. கனரக வண்டிகளுக்கு உபயோகப்படுத்தப்படும் பேட்டரிகளை சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் மின்சாரத்தால் சார்ஜர் போட்டு இயக்கப்படும் பேட்டரி மொபெட் ஒன்றை வாங்கினார். அந்த மொபட்டுக்கு வீட்டின் முன்பகுதியில் வைத்து சார்ஜர் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த மொபெட் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

தீ விபத்து
இந்த சத்தம் கேட்டதும் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து வெளியே பார்த்தனர். மொபெட் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்ததும் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கருகியது
ஆனால் அளவுக்கு அதிகமாக தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். அதனால் உடனடியாக தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அவர்களே போராடி தீயை அணைத்து விட்டாலும் பேட்டரி மொபெட் மொத்தமா தீயில் எரிந்து நாசமானது.

விசாரணை
இந்த தீ விபத்தில் வீட்டின் சுவர்களில் கரும்புகை படிந்துவிட்டது. பக்கத்தில் இருந்த எலக்ட்ரிக் வயர்கள், சுவிட்ச் பாக்ஸ் என அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது. இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து பேட்டரி மொபெட் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கவலை
இன்னைக்கு காலைல இருந்தே அந்த பகுதியில் லோ-வோல்ட்டேஜ் கரண்ட் இருந்ததாம். அதனால்தான் பிடித்ததா? அல்லது பேட்டரி மொபெட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததா? என்ற கோணங்களில் விசாரணை ஆரம்பமாகி உள்ளது. ஆனாலும் வாங்கி கொஞ்ச நாள்தான் ஆகுது.. அதுக்குள்ள இப்படி கண்முன்னாடியே கருகி போயிடுச்சே என்று அப்பகுதி மக்கள் வருத்தப்பட்டனர்!
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications