சென்னையில் மார்க் செய்யப்பட்ட.. 1000 இடங்கள்.. வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.. அசத்தல்
சென்னை: கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சென்னையில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 1,000 மெயின் மற்றும் உட்புற சாலைகள் அடுத்த வாரத்திற்குள் சரி செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல சாலைகளில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய ஜெட் பேட்ச் இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 7 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது. இந்த இயந்திரங்கள் அகமதாபாத்தில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டு, சாலைகளில் உள்ள குழிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும்.

முழுவதாக மோசம் அடைந்த சாலைகள் சரி செய்யப்படும். அவை பேட்ச் செய்யப்படாமல் மொத்தமாக சாலைகள் மீண்டும் போடப்படும். அதுவே பள்ளங்கள் மட்டும் இருந்தால் அவை பேட்ச் செய்யப்படும். ஒரு பள்ளத்தை சரிசெய்ய சுமார் 20 நிமிடங்கள் ஆகும். இரவு நேரங்களில் இதற்கான பணிகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராயபுரம், தொண்டியார்பேட்டை, பெருங்குடி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய சாலைகளான பர்னபி ரோடு, புரசைவாக்கம் மெயின் ரோடு, பேசின் பிரிட்ஜ் ரோடு, அண்ணாநகரின் சாந்தி காலனி ரோடு உள்ளிட்ட சாலைகள் முதல் கட்டமாக சரி செய்யப்படும். இந்த சாலைகளை சரிசெய்வது போக்குவரத்து நெரிசலையும் குறைக்க உதவும்.
கண்டறியப்பட்ட 1,000 மோசமான சாலைகளில் 300 வடசென்னையில் உள்ளன. அடுத்த மழை முடிந்ததும் சாலைகள் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிப்ரவரிக்குள், சேதமடைந்த சாலைகளை முழுவதுமாக மாற்றுவோம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது . பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, மேட்லி ரோடு மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சில சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சாலைகள் சேதமடைந்துள்ளதால் அவற்றை சரிசெய்ய வேண்டும்.
சுவர் விரிசல்களை நிரப்ப, சிமெண்ட் அடிப்படையிலான ரசாயனங்களை உட்செலுத்தும் செயல்முறையான கிரவுட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது சுரங்கப்பாதையில் தண்ணீர் நுழைவதைத் தடுக்கும். கே.எம்.சி.எச்.க்கு வெளியே உள்ள ஈ.வி.ஆர்.பெரியார் சாலை மற்றும் கோயம்பேடு சாலை சந்திப்பு போன்ற முக்கிய சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் முதல் கட்டமாக அங்கே பணிகள் நடக்கும்.
கே.எம்.சி.எச்.க்கு வெளியே உள்ள நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், இரவு நேரங்களில் மழை பெய்யும் போது, சாலை பள்ளங்கள் தெரிவது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமப்படுகின்றனர். இதனால் அங்கேயும் விரைவில் சாலை சரி செய்யப்படும்.
உத்தரவு: சென்னையில் தொடர் மழை வெள்ளம் முடிந்து உள்ள நிலையில் சேதமடைந்த சாலைகளை உடனுடக்குடன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் சாலைகள் மூலம் பேட்ச் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் உடனுக்குடன் குழிகள் மூடப்படுகின்றன.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு காரணங்களுக்காகக் சாலை பணிகள் நடந்து வருகின்றன. சாலைகளை விரிவு செய்வது, பாதாள சாக்கடை அமைப்பது, கழிவு நீர் குழாய்களை அமைப்பது, கேபிள் அமைப்பது, மழை நீர் வடிகால் சென்னையில் அமைப்பது, மின்சார வடங்களை அமைப்பது, பாலம் கட்டுவது என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்தையும் ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.











Click it and Unblock the Notifications