ஒரே இரவில் காலி.. ஹேக் செய்யப்பட்ட 15 பிரபல யூடியூப் சேனல்கள்.. பரிதாபங்கள், சென்னை மீம்ஸ் முடக்கம்!
சென்னை: யூடியூப் தளத்தில் தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் ஹேக் ஆகி உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் யூடியூப் கலாச்சாரம் புதிய உயரம் தொட்டுள்ளது. பல புதிய சேனல்கள் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தோன்றிய வண்ணம் உள்ளன. அதில் சோதனைகள், பரிதாபங்கள் போன்ற சேனல்கள் தமிழ்நாட்டில் டிரெண்ட் செட்டர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
காமெடி வீடியோக்கள், அரசியல் கலாய் செய்திகள், பிக்பாஸ் வீடியோக்கள், கான்செப்ட் வீடியோக்கள் பல இந்த சேனல்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ஹேக்
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூடியூப் யூப் சேனல்கள் ஹேக் ஆகி உள்ளது. அதேபோல் சோதனைகள், லைட்ஹவுஸ், அர்பன் நக்கலைட்ஸ் போன்ற சேனல்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இவை எல்லாம் தமிழ்நாட்டில் அதிக சப்கிரைப்பர்ஸ் இருக்கும் யூடியூப் சேனல்கள் ஆகும். ஒரே இரவில் இந்த சேனல்கள் மொத்தமாக ஹேக் ஆகியுள்ளது.

எத்தனை சேனல்கள்?
இதுவரை வெளியான விவரங்களின் படி 15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் நள்ளிரவில் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. குக் வித் கோமாளி கனி ஆகியோரின் குக்கிங் சேனல் உட்பட சில சமையல் தொடர்பான சேனல்களும் முடக்கப்பட்டு இருக்கிறது. இரவோடு இரவாக மர்ம நபர்களால் இந்த சேனல்கள் முடக்கப்பட்டது பல்வேறு சந்தேங்களை எழுப்பி உள்ளது. ஹேக் செய்யப்பட்ட சேனல்களில் எல்லாம் கிரிப்டோகரன்சி விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சி
எனவே கிரிப்டோகரன்சி தொடர்பான குழு ஒன்று ஹேக்கிங்கை மேற்கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது கிரிப்டோகரன்சிக்கு விளம்பரம் தரும் வகையில் இந்த சேனல்களை ஹேக் செய்து இருக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன. முடக்கப்பட்ட சேனல்கள் அனைத்திலும் முகப்பு பக்கத்தில் கிரிப்டோகரன்சியின் விளம்பரங்கள் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேனல்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

யூடியூப் சேனல்கள்
அதன்படி இந்த ஹேக் சேனல்களில் சில சேனல்களின் உரிமையாளர்கள் சார்பாக யூடியூப் தளத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த புகாரை விசாரித்து முதல் கட்டமாக யூடியூப் சேனல்களை முடக்கம் செய்வார்கள். பின்னர் ஹேக்கிங் நடைபெற்றது குறித்து விசாரணை செய்வார்கள். அதன்பின் ஹேக் செய்யப்பட்ட சேனல்களை மீட்டு கொண்டு வருவார்கள். இந்த 15 சேனல்கள் போக பல நூறு குட்டி குட்டி சேனல்களும் ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications