Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சேர்த்து வச்ச மொத்தப் பணமும் போச்சு”.. தேவநாதன் மீது ஒரே நாளில் குவிந்த 300+ புகார்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்பாடு செய்த சிறப்பு முகாமில் தேவநாதன் யாதவ் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது வரை 4,100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 315 புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை மயிலாப்பூரில் தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தை இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத்தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன. இந்த நிதி நிறுவனத்தில் குறைந்தபட்ச நிரந்தர வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். செலுத்தும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீத வட்டி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

devanathan yadav police money fraud

அதை நம்பி தமிழ்நாடு முழுவதும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில், முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வுத் தொகை மற்றும் வட்டிப் பணம் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்குச் சென்று பணத்தைக் கேட்டு முறையிட்டனர். மேலும், காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்தனர்.

ஆனால் நிதி நிறுவனம் சார்பில் முறையாக பதில் அளிக்காததால், கடந்த ஜுன் 6ஆம் தேதி முதலீட்டாளர்கள் பலர் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பிரசாத் என்பவர் அளித்த புகார் தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.525 கோடி பெற்று ஏமாற்றியதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, திருச்சியில் வைத்து இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவை கைது செய்தனர். மேலும், இதே மோசடி வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர்களான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பல கோடி‌ ரூபாய் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம், தி.நகரில் உள்ள தேவநாதனின் வீடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நபர்களின் வீடுகள் என 12 இடங்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்தச் சோதனையில் 4 லட்சம் பணம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்குகள் உள்பட சில முக்கிய ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சோதனையின் முடிவில் நிதி நிறுவனத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்த நிலையில், தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். இதுவரை 27 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில் நிதி நிறுவனத்தின் பெயரில் இருந்த 18 வங்கிக் கணக்குகள், தேவநாதனின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர் குணசீலனின் 2 வங்கிக் கணக்குகள், ஒளிப்பதிவாளர் மகிமைநாதனின் 2 வங்கிக் கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.

தேவநாதன் தொடர்புடைய அடையாறு, வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை, பெரம்பூரில் இயங்கி வந்த நிதி நிறுவனக் கிளை அலுவலகங்கள், மயிலாப்பூரில் உள்ள 2 கட்டடங்கள் உட்பட 8 கட்டடங்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர். தேவநாதன் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சுதிர் சங்கர் (46) என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தேவநாதன் யாதவ் செய்ய முறைகேடு விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களை அழைத்து புகார் கொடுக்க மயிலாப்பூரில் போலீசார் சார்பில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 3,814 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

2 நாட்களாக நடைபெற்று வரும் அந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் நிதி நிறுவனத்தில் பணாம் கட்டிய ஆவணங்கள், ரசீது உள்ளிட்டவற்றின் நகலை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று வரை 3,814 புகார்கள் வந்துள்ளன. இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக தேவநாதன் யாதவ் மோசடி செய்ததாக கூறி புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேவநாதன் மீது இன்று மேலும் 315 புகார்கள் வந்துள்ளன. பொதுமக்கள், தாங்கள் சேமித்த பணத்தை எல்லாம் ஏமாற்றிவிட்டார்கள் என கண்ணீருடன் புகார் அளித்துள்ளனர். இதுவரை இந்த விவகாரத்தில் 4,100க்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்படும் புகார்கள் அடிப்படையில் தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+