வசமாக மாட்டிய 75 பெரிய தலைகள்.. இந்திய அரசியலையே உலுக்க போகும் ஹனி டிராப் சம்பவம்.. சிக்கிய பலர்
சென்னை: மகாராஷ்டிராவில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட 72 முதல் 75 மூத்த அதிகாரிகள் ஒரு பெரிய ஹனி டிராப் மோசடியில் சிக்கியதாக வெளியான செய்திகளையடுத்து அம்மாநில அரசியலே அதிர்ச்சியில் ஸ்டன் ஆகி உள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
அம்மாநில அரசியலை இது பெரிய அளவில் உலுக்கி உள்ளது. பல அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்கள் இதனால் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. உதவி கேட்டு வரும் பெண்கள் போல நடித்து அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் இவர்கள் நெருக்கம் ஆகி உள்ளனர். பின்னர் அவர்களிடம் கூடுதல் நெருக்கமாகி அப்படியே ஆபாச வீடியோ, புகைப்படங்களையும் எடுத்து உள்ளனர். பின்னர் அதை பயன்படுத்தி அரசியல்வாதிகளை மிரட்டி பல விஷயங்களை சாதித்துள்ளனர். இவர்களுக்கு பின் பெரிய குழுவே இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பல உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் , சில அமைச்சர்கள் கூட இந்த வழக்கில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல பாஜக தலைகளும் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது . அதேபோல் இவர்களுக்கு பின் சில அரசியல் புள்ளிகள் முக்கியமாக ஹனி டிராப் செய்வதில் பிரபலமான அரசியல் புள்ளிகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட இவ்வளவு முக்கிய நபர்களை இந்த வலையில் எப்படி சிக்க வைத்தனர் என்பது இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
எங்கே நடந்தது?
இந்த சம்பவங்கள் நாசிக்கில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் நடைபெற்றுள்ளன. அதாவது அதிகாரிகளை, அரசியல்வாதிகளை இங்கே அழைத்து வந்துதான் நெருக்கமாக வீடியோ எடுத்தது ஹனி டிராப். செய்துள்ளனர் இது தொடர்பாக மும்பை நாக்கா காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். முதல்வர் ஏன் மௌனமாக இருக்கிறார்? மாநில புலனாய்வுத் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இது உண்மையென்றால், அது மிகப்பெரிய அவமானம். என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்து வருகின்றன.
இந்திய அரசியலில் இது மிகப்பெரிய ஹனி டிராப் வீடியோக்களில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பிய மூத்த காங்கிரஸ் தலைவர் நானா படோலே, இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரினார். ஹனி டிராப் சம்பவம் குறித்த பல முக்கியமான தகவல்கள் வந்துள்ளன. இது ஒரு பெரிய மற்றும் முக்கியமான பிரச்சினை. இதன் காரணமாக ரகசிய ஆவணங்கள் தேச விரோதிகளின் கைகளுக்குச் சென்றால், அது பெரிய தவறாகிவிடும் என்றும் எச்சரித்தார்.
அதிர்ச்சி தரும் சம்பவம்
பல உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் , சில அமைச்சர்கள் கூட இந்த வழக்கில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஹனி டிராப் குறித்த ஊடக செய்திகள் வந்த பிறகும், அரசு ஏன் அமைதி காக்கிறது? அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட இவ்வளவு முக்கிய நபர்களை இந்த வலையில் எப்படி சிக்க வைத்தனர்? புலனாய்வு அமைப்புகள் ஏன் ஆரம்பத்திலேயே கண்டறியத் தவறிவிட்டன? இனி இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? போன்ற கேள்விகளை எதிர்க்கட்சிகள் அங்கே எழுப்பி உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications