சென்னை மெட்ரோ ரயிலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னைவாசிகள்.. செப்டம்பரில் தான் தரமான சம்பவம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்தை கடந்த 9 மாதங்களில் ஆறு கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி உள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 84 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். இதுவரை இல்லாத உச்சம் ஆகும்.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதல்கட்ட மெட்ரோ ரயில் கடந்த 2016ம் ஆண்டு முதல் படிப்படியாக அமலுக்கு வந்தது. தற்போது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரை மற்றும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கபட்டு வருகிறது. சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்ட பாதை இரண்டு பாதைகளிலும், இயக்கப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் சுரங்கப்பாதை வழியிலும், வடபழனி, கோயம்பேடு பாதையில் உயர்மட்ட பாதையிலும் ரயில்கள் இயக்கப்படுகிறது.

இவை இல்லாமல் சென்னை பூந்தமல்லி டு கலங்கரை விளக்கம், மாதவரம் டூ சிறுசேரி, மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை மூன்று வழித்தடங்களில பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வழித்தடங்களில் பணிகள் முடிந்தால் மிகப்பெரிய அளவில் மக்கள் மெட்ரோ ரயிலை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு நாளும் பல லட்சம் மக்கள் மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் நிலை வரும் ஆண்டுகளில் வரப்போகிறது. சென்னையில் எம்டிசியின் இடத்தை மெட்ரோ ரயில் பிடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
இதனிடையே விமானநிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதற்கட்ட மெட்ரோ வழித்தடத்தில், தினமும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகிறார்கள். சென்னையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்கு மெட்ரோ ரயில் தான் தீர்வாக உள்ளது. பயண நேரம் குறைவு, நல்ல வசதி போன்ற காரணங்களால் பலரும் இப்போது மெட்ரோ ரயிலில் தான் பயணிக்கிறார்கள்.
இதனிடையே சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 9 மாதங்களில் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி 6 கோடிய 66 லட்சம் பயணிகள் பயணித்து உள்ளனர். நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69 லட்சத்து 99 ஆயிரத்து 341 பயணிகளும் பயணித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 432 பயணிகளும், மே மாதத்தில் 72 லட்சத்து 68 ஆயிரத்து 7 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74 லட்சத்து 6 ஆயிரத்து 876 பயணிகளும், ஜூலை மாதத்தில் 82 லட்சத்து 53 ஆயிரத்து 692 பயணிகளும் பயணித்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் மாதத்தில் 85 லட்சத்து 89 ஆயிரத்து 977 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் 84 லட்சத்து 37 ஆயிரத்து 182 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து உள்ளனர். மிக அதிகபட்சமாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அன்று மட்டும் 3 லட்சத்து 37 ஆயிரத்து 586 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளார்கள்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட் (WhatsApp) மற்றும் Paytm உள்ளிட்ட Appகள் உள்ளிட்ட இணைய வசதிகளை பயன்படுத்தி எடுக்கும் அனைத்து வகையான பயணச் சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் (+91 83000 86000) எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும், Paytm App போன்ற இணைய வழி பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாகவும், பயணிகள் அவர்களின் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்" இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications