சென்னையில் காலையில் வாக்கிங் போன மக்களுக்கு.. மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த ஷாக்!
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள், வியாழக்கிழமை காலை நடைபயிற்சி (வாக்கிங்) சென்ற மக்களுக்கு அபராதம் விதித்தது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டிருந்த ரசீதுகளின்படி, தி நகரில் வசிக்கும் ஒருவருக்கு வாக்கிங் போனத்திற்காக வியாழக்கிழமை ரூ .100 அபராதம் விதிக்கப்பட்டது.

விதிகளை மீறி 'காலை நடைபயிற்சி' சென்றதாக அந்த ரசீதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சென்னைவாசிக்கு 'காலை நடைபயிற்சி' செய்ததற்காக ரூ .300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் வீட்டிற்கு வெளியே வந்து பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி நடைபயிற்சி சென்றால் அபாரதம் வசூலிக்கப்படும் என்று எச்சரித்தார்.
சென்னையில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை தடுப்பதற்கு இந்த உத்தரவை சென்னை மாநகராட்சி இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் வாக்கிங் போகாமல் வீட்டுக்குள்ளே முடங்கும் நிலையில் சென்னை வாசிகள் தவித்து வருகின்றனர். சென்னையில் பெரிய அளவில் உடல் உழைப்பே இல்லாமல சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ள பலர், நடைபயிற்சி அவசியம் என்று விரும்புகிறார்கள் ஆனால் கொரோனா அதிகம் பரவுதல் காரணமான அதற்கு சென்னை மாநகராடசி அனுமதிக்கவில்லை.
சென்னையில் நேற்று மாலை நிலவரப்படி 45814 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26472 பேர் குணம் அடைந்துள்ளனர். 668 பேர் உயிரிழந்துள்ளனர். 18,673பேர் நோய் பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினமும் 1400க்கும் அதிகமானோர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த ஆணையர் பிரகாஷ், தூய்மை பணியாளர்களுக்கு உணவு மட்டுமின்றி, கையுறை, முகக்கவசம் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications