2020 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட உணவு எது தெரியுமா?.. அய்யோ கேட்டாலே குமட்டுகிறது!
சென்னை: 2020ஆம் ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணியும் அதிகம் தேடப்பட்ட உணவாக வவ்வால் சூப்பும் இடம்பெற்றதாக உணவு டெலிவரி நிறுவனங்களின் கணக்கெடுப்பு கூறுகிறது.
ஸ்விக்கி, ஜொமாட்டோ என உணவு டெலிவரி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் ஆண்டுதோறும் இந்தியா அளவில் எந்த உணவு அதிகமாக ஆர்டர் செய்யப்படுகிறது என்பது குறித்து வெளியிடுவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் 19 லட்சம் பேர் வெஜிடபிள் பிரியாணியை ஆர்டர் செய்ததாக ஜொமாட்டோ நிறுவனம் கூறுகிறது. கடந்த மார்ச் மாதம் கொரோனா பொது முடக்கத்தின் போது உணவு விநியோக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஸ்விக்கி
கடந்த மார்ச் 15 முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை ஜொமாட்டோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது 46.3 சதவீதத்திலிருந்து 41 சதவீதம் குறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அது போல் ஸ்விக்கியிலும் 48.8 சதவீதத்திலிருந்து 42.4 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

மோமோக்கள்
இதனால் இந்த நிறுவனங்கள் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் சேவையை தொடங்கியது. ஜொமாட்டோ எடுத்த புதிய கணக்கெடுப்பில் டெல்லி, மங்களூரு, புனே ஆகிய நகரங்களில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் மோமோக்கள் முதலிடம் பெற்றுள்ளன. இந்த நகரங்களில் 2.5 மில்லியன் மோமோக்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

வைரஸ்
மோமோக்கள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட நகரங்களில் முதலிடம் டெல்லிக்குத்தான். அது போல் இந்தியாவில் 414 பேர் ஜொமாட்டோவில் வவ்வால் சூப்பை தேடியதாக கூறப்படுகிறது. சீனாவின் வுகானில் வெட் மார்க்கெட்டில்தான் கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவியதாக சொல்லப்படுகிறது.

பிரியாணி
அதிகம் ஆர்டர் செய்த உணவுகளில் பிரியாணிக்கு முதலிடம். இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அது போல் சிக்கன் பிரியாணியும் அதிகம் பேரால் விரும்பி ஆர்டர் செய்யப்பட்டதாம். ஒவ்வொரு வெஜ் பிரியாணிக்கு சமமாக ஆறு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications