நாட்டுப்பற்று மிக்க நடிகர் தான் அஜித்.. படத்தை பகிர்ந்து பாராட்டிய அர்ஜூன் சம்பத்.. பின்னணி இதுதான்
சென்னை: ‛‛நடிகர்கள் விளம்பரம், வசூலை நோக்கி ஓடும் வேளையில் நாட்டுப்பற்று மிக்க நடிகராக அஜித் உள்ளார்'' என இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பாராட்டியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் திரைப்பட சூட்டிங் இல்லாத காலத்தில் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும், வெளிநாடுகளிலும் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதுதொடர்பான படங்கள் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தும். அந்த வகையில் தான் தற்போது நடிகர் அஜித் வடஇந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

ஏகே 61 படப்படிப்பு
நடிகர் அஜித் குமார் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதனால் AK61 என அந்த படம் அழைக்கப்பட்டு வருகிறது. இதில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பைக் ரைட் செய்யும் அஜித்
இந்நிலையில் நடிகர் அஜித் படப்பிடிப்புக்கு மத்தியில் ப்ரீயாக இருக்கும் நேரத்தில் பைக்கில் ரைட் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தியா உள்பட வெளிநாடுகளில் அவர் தனக்கு சூட்டிங் இல்லாத வேளையில் வாகன பயணம் மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதுதொடர்பான படங்கள் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பபடும்.

கார்கில் நினைவிடத்தில் மரியாதை
அந்த வகையில் அவர் தற்போது காஷ்மீர், லடாக், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தற்போது பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் லடாக் சென்றுள்ள அஜித் பைக்கில் வலம் வருகிறார். கார்கில் நினைவிடத்துக்கு சென்ற அஜித் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த படங்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அஜித்தை பாராட்டிய அர்ஜூன் சம்பத்
இந்நிலையில் தான் நடிகர் அஜித்தை இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பாராட்டியுள்ளார். அதாவது கார்கில் நினைவிடத்தில் நடிகர் அஜித் மரியாதை செலுத்திய படங்களை ட்வீட்டர் பக்கத்தில் அர்ஜூன் சம்பத் பதிவிட்டதோடு, ‛‛கார்கில் வீரர்களின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்திய அஜித்குமாரை பாராட்டுகிறேன். விளம்பரம், வசூலை நோக்கி ஓடும் நடிகர்கள் மத்தியில் நாட்டுப்பற்று மிக்க ஒரு நடிகரை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது'' என கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications