தாய் பத்திரம்.. சொத்து பத்திரத்தை இப்படி பத்திரமா வையுங்க.. தொலைந்த பத்திரத்தை மீட்க முடியுமா? ஈஸி
சென்னை: சொத்து பத்திரம் என்றால் என்ன? அதன் அவசியங்கள் என்னென்ன? தாய்ப்பத்திரம் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
நீங்கள் சொந்தமாக வாங்கிய சொத்துக்கள், உங்களுக்குத்தான் என்பதை உங்களுக்கு எடுத்துரைக்க ஆதாரமாக இருக்கும் ஆவணம்தான் சொத்து பத்திரங்கள்தான்.. எனவேதான் இவைகளை ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் எப்போதுமே கவனமாக கையாள வேண்டியிருக்கிறது.

மூல ஆவணம்: இந்த பத்திரத்தில், மூல ஆவணத்தின் விவரங்கள், தேதி, பத்திர எண், சொத்து விவரம், சொத்தின் விஸ்தீரணம், சர்வே எண்கள், உட்பிரிவு எண், கிராம எண், பெயர், போன்றவை பதிவு செய்யப்பட வேண்டும்.
அதேபோல, உரிமையாளரின் முழுப்பெயர், அடையாள அட்டை, ரேஷன் கார்டில் உள்ள முகவரி, சொத்தினை விற்பனை செய்தவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள், அவரது அடையாள அட்டை மற்றும் மூல ஆவணத்தில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.. இவ்வளவும் சரிசெய்த பிறகு பத்திரமாக அந்த ஆவணத்தை வைத்து கொள்ள வேண்டும்.
லேமினேஷன்: ஆவணம் பத்திரமாக இருக்க, பத்திரங்களை லேமினேஷன் செய்யக்கூடாது.. ஏனென்றால், லேமினேஷன் செய்துவிட்டால், ஆவணங்களின் நம்பகத்தன்மை போய்விடும்.. அதனால், எப்போதுமே ஆவணங்களை தனித்தனியே பிரித்து வைப்பது நல்லது..
அதேபோல, ரப்பர் பேண்ட், கிளிப்புகளையும் போட வேண்டாம். வெறுமனே ஆவணங்களை ஒரு பாலித்தீன் கவரில் போட்டுவைத்தால் போதும். இதில தண்ணீர் புகாது. அழுக்குகள் எளிதில் ஏற வாய்ப்பில்லை.. தேவைப்பட்டால், பாச்சா உருண்டை எனப்படும் ரசக்கற்பூரத்தை ஒன்றிரண்டு அதில் போட்டு வைத்தால், பூச்சிகள் எதுவும் அண்டாது. அல்லது சாதாரண ஃபைல்களில் வைத்தாலும், சொத்து பத்திரங்கள் பத்திரமாகவே இருக்கும்..
பாதுகாப்பு: அவ்வப்போது அதாவது நல்ல வெயில் நேரத்தில், இந்த கவரை பிரித்து, ஒவ்வொரு ஆவணங்களையும் தனித்தனியாக பிரித்து, நல்ல சூரிய வெளிச்சத்தில் வைத்து, பிறகு மீண்டும் பத்திரப்படுத்தி வைக்கலாம். வெளியூர் பயணங்களுக்கு ஒரிஜினல் ஆவணங்களை கொண்டு செல்வதை தவிர்க்கலாம்.
அதேபோல, சொத்து பத்திரம் எதாவது தொலைந்து விட்டால், ஆன்லைனிலேயே அதனை பெற்றுக்கொள்ளலாம்.. ஆன்லைனில் இதற்கான வழிமுறைகள் என்னென்ன?
- முதலில் https://tnreginet.gov.in/portal/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று, உங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் தந்து உள்ளே நுழைய வேண்டும.
- "உள்நுழைவு" என்ற இடத்தில், உங்களுடைய பெயர், பாஸ்வேர்ட், மற்றும் கேப்சா கோடினை பிழையில்லாமல் தந்து உள்ளே நுழைய வேண்டும்.
- ஒருவேளை இந்த இணையதளத்துக்குள் இப்போதுதான் முதல்முறையாக நுழைகிறீர்கள் என்றால், "பயனர் பதிவு" என்பதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்
- ஸ்கிரீனில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து, கணக்கை உருவாக்க வேண்டும்.. இப்போது உங்களது மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும்.. அந்த நம்பரை பதிவிட்டால், உங்கள் புது கணக்கு ஓபன் ஆகிவிடும்.
- "மின்னணு சேவை" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், இப்போது ஸ்கிரீனில் நிறைய ஆப்ஷன்கள் தென்படும். இதில் "சான்றளிக்கப்பட்ட நகல்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- "தேடல் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பிக்க" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், புதிய ஸ்கிரீன் தோன்றும்
- இந்த பக்கத்தில் "ஆவணத்தின் வகைப்பாடு" என்ற இடத்தில் "சொத்து சம்பந்தப்பட்ட ஆவணம்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்
- பிறகு, "ஆவண எண்" என்பதில், உங்களுடைய வில்லங்க சான்றிதழில் உள்ள ஆவண நம்பரை பதிவிட வேண்டும்
"சார் பதிவாளர் அலுவலகம்" என்ற இடத்தில், தாங்கள் எந்த அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்தீர்களோ, அந்த அலுவலகத்தினை தேர்வு செய்ய வேண்டும்
"ஆண்டு" என்ற இடத்தில், எந்த ஆண்டு பத்திரம் பதிவு செய்யப்பட்டதா, அந்த ஆண்டினை தேர்வு செய்ய வேண்டும்
இப்போது, அங்கு தென்படும் கேப்சா கோடினை, அதிலுள்ளது போலவே, டைப் செய்து, "தேடுக" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், இப்போது தாங்கள் பதிவு செய்த ஆவணங்களின் விவரங்கள் பதிவாகிவிடும்.
பிறகு "இணையவழி விண்ணப்பிக்க" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "தனிப்பட்ட விவரங்கள்" என்ற ஆப்ஷனில் உங்களது தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து, "சரி" என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- "கட்டண விவரங்கள்" என்ற பக்கம் ஓபன் ஆகிவிடும். இதில் செலுத்த வேண்டிய கட்டணங்கள் தரப்பட்டிருக்கும். அதில் "ஆன்லைன் மூலம்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, "செலுத்துக" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- ஆன்லைனில் பணம் கட்டியபிறகு, ACKNOWLEDGE RECEIPT கிடைத்துவிடும்..
பிறகு வெப்சைட்டின் முகப்பு சென்று "மின்னணு சேவை" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "சான்றளிக்கப்பட்ட நகல்" என்ற ஆப்ஷனையும், பிறகு "கோரிக்கை பட்டியல்" என்ற ஆப்ஷனையும் கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது, உங்களுடைய விண்ணப்பத்தின் எண், பதிவு எண், ஆவணத்தின் வகைப்பாடு, விண்ணப்ப நாள், தொகை செலுத்தப்பட்ட நிலைப்பாடு, கையொப்பட்ட ஆவணம் போன்ற விவரங்கள் அதில் இருக்கும்.
டவுன்லோடு: 2 நாள் கழித்து, இந்த இணையதளத்தை செக் செய்து, "மின்னணு சேவை" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "சான்றளிக்கப்பட்ட" என்ற ஆப்ஷனையும், பிறகு "கோரிக்கை பட்டியல்" என்ற ஆப்ஷனையும் கிளிக் செய்தால், கீழ் பகுதியில் கையொப்பமிட்ட இடத்தில் டவுன்லோடு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால், உங்களுக்கு தேவையான பத்திர நகல்களை ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆனால் எந்த பத்திரமாக இருந்தாலும் அதை பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும்
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications