தாய் பத்திரம் இருக்கா? கிரையம் முடிக்கணுமா? வில்லங்கம் வரக்கூடாது.. நிலம் வாங்கும் முன் இது அவசியம்
சென்னை: நிலம் வாங்க முடிவு செய்திருக்கிறீர்கள் என்றால், சில விஷயங்களை முன்கூட்டியே கவனிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. பிற்காலத்தில் எந்தவிதமான சட்டசிக்கல்களும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, நிலம் தொடர்பான விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எடுத்துரைத்து வருகிறார்கள்.
பாடுபட்டு உழைத்த பெரும் பணத்தில், சொந்தமாக நிலம் வாங்கும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, நீங்கள் நிலத்தை யாரிடமிருந்து வாங்குகிறீர்களோ, அவர்கள் நம்பகமான நபராக இருப்பது அவசியம்.. ஒருவேளை நீங்கள் சொத்தில் முதலீடு செய்தால், தெரிந்த நபரின் உதவியுடன் நிலத்தை வாங்குவது முக்கியம்.

சட்ட ஆவணங்கள்: அதேபோல, நிலத்தை வாங்கும் முன்பு. நிலம் தொடர்பான சட்ட ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.. அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில், சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான சட்ட ஆவணங்களை கேட்டு பெறலாம். மேலும், வழக்கறிஞர் உதவியுடன் விற்பனை ஒப்பந்தம், சொத்து வரி ரசீது போன்ற ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்...
நிலம் வாங்குவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நில உரிமையாளரை நேரில் சந்தித்து, நிலம் குறித்து விரிவான பேச்சை நடத்தலாம்.. இந்த சந்திப்பின்போது, நிலம் தொடர்பான ஆவணங்களை நன்றாக ஆராய முடியும்.. அத்துடன், அவர்களின் அடையாள அட்டை, அடையாள அட்டை, ஆதார் அட்டை, நிலப்பதிவு போன்றவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல, அக்ரிமென்ட் போடுவதற்கு முன்பு, அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் கருத்து கேட்கலாம்..
மூலப்பத்திரம்: அதேபோல, ஒருவர் நிலத்தை வாங்கும் முன்பு கடந்த 30 வருடங்களாக அந்த நிலத்தை யார் எல்லாம் வைத்து இருந்தார்கள் என்பதை அறிய வேண்டும்.. இந்த விவரங்கள் நிலத்தின் மூலப்பத்திரத்தில் இருக்கும் என்பதால், அதை வாங்கி முதலில் சரிபார்க்க வேண்டும்..
அதேபோல, நிலத்தின் தற்போதைய மதிப்பு எவ்வளவு? வில்லங்க சான்றிதழ் பெற்று பெற்று அந்த இடத்தில் வேறு ஏதாவது சிக்கல்கள் உள்ளதா? நிலத்தின் மீது வழக்கு அல்லது கடன் ஏதாவது உள்ளதா? சொத்தை விற்பவரின் பெயரில் அந்த நிலத்தின் தற்போதைய உரிமைக்கான பட்டா உள்ளதா? பத்திரத்தில் குறிப்பிடப்பட்டது போல நிலத்தின் அளவு பட்டா, சிட்டாவில் உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும்.
நில வரி: நீங்கள் வாங்கப்போகும் இடத்தின் வரைப்படத்தையும் சரிபார்க்க வேண்டும்... அதேபோல வீடு கட்ட வாங்கும் இடத்தின் மீது மின் கம்பிகள் சென்றால், அங்கு வீடு கட்ட முடியாது. அதனால், இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, நிலத்தின் உரிமையாளரின் பெயரில், நில வரி செலுத்தப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.
ஒரு வேளை நில உரிமையாளர் பவர் பத்திரம் மூலம் முகவருக்கு சில அதிகாரம் வழங்கியிருந்தால், அந்த அதிகாரம் நிலுவையில் உள்ளதா? முதன்மையாளர் (நில உரிமையாளர்) உயிருடன்தான் உள்ளாரா என்று சரிபார்க்க வேண்டும்
ஆவணங்கள்: நிலம் வாங்கும்போது, உரிமைப் பத்திரம், பட்டா, என்கம்பரன்ஸ் சான்றிதழ், லேஅவுட் ஒப்புதல் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.. ஏனென்றால், பிற்காலத்தில் சட்டப்பிரச்சனைகளைத் தவிர்க்க, நிலம் வாங்கும்போது மேற்கண்ட அனைத்து ஆவணங்களும் இருப்பது நல்லது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications