Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“அம்மாவுக்கு உரிமை”.. இறந்த மகளின் ரூ6 லட்சம் ஜீவனாம்ச பாக்கியை கேட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகள் இறந்துவிட்ட நிலையிலும் அவருக்கு கிடைக்க வேண்டிய ஜீவனாம்ச பாக்கியை பெறுவதற்கு தாய்க்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருக்கு சரஸ்வதி என்பவருடன் கடந்த 1991 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விவாகரத்து கோரி வழக்கு தொடரப்பட்டு செய்யூர் நீதிமன்றம் கடந்த 2005 ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்தில் வழங்கி உள்ளது.

Mother has the right to receive the alimony of daughter after her death

இந்த நிலையில் விவாகரத்து செய்த கணவர் அண்ணாதுரையிடம் ஜீவனாம்சம் கேட்டு மதுராந்தம் நீதிமன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு சரஸ்வதி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மதுராந்தம் நீதிமன்றம் சரஸ்வதிக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டில் உத்தரவு அளித்தது.

நீதிமன்றம் தீர்ப்பின்படி ஜீவனாம்ச பாக்கி தொகையான ரூ.6.22 லட்சத்தை தனக்கு வழங்க உத்தரவிடுமாறும் சரஸ்வதி புதிய மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் இருந்த நிலையிலேயே கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சரஸ்வதி மரணம் அடைந்தார். இந்த நிலையில் சரஸ்வதியின் தாயார் ஜெயா, ஜீவனாம்ச பாக்கியை தனக்கு வழங்க வேண்டும் என்பதால் அவர் தொடர்ந்த வழக்கில் தன்னை இணைக்க வேண்டும் என்று கூறி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்ற மதுராந்தகம் நீதிமன்றம் அவரை வழக்கில் இணைத்தது. இதனை எதிர்த்து அண்ணாதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்து வாரிசு உரிமை சட்டம் 15 இன் கீழ், மனைவி இறந்துவிட்டால் குழந்தைகளுக்கும் அதன் பிறகு கணவருக்கும், அவரது அடுத்ததாக பெற்றோருக்கும் சொத்துக்கள் வரும் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் அண்ணாதுரை - சரஸ்வதி ஆகியோருக்கு விவாகரத்தாகி, தற்போது சரஸ்வதியும் இருந்துவிட்டதால் அவரது வழங்கப்பட வேண்டிய ஜீவனாம்ச தொகை பாக்கியை தாயார் ஜெயா பெறுவதற்கு உரிமை உள்ளது என்று கூறி, மதுராந்தகம் நீதிமன்றம் இந்த வழக்கில் ஜெயாவை இணைத்து உத்தரவிட்டதை உறுதி செய்து, அண்ணாதுரையின் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+