தங்க நகைகளுடன் மருமகனுடன் ஓடினாரே மாமியார்.. இப்ப மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்த நபர்! ஹய்யோ
கான்பூர்: உத்தரபிரதேசத்தில் 2 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் அதிர்வுகள் இன்னமும் அடங்காத நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அதுபோலவே நடந்துள்ளது.. தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன், தனது தந்தை விரசமாக பேசிய ஆடியோக்களை கேட்டு மகன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த விசாரணையை போலீசாரும் நடத்தி வருகிறார்கள்.. என்ன நடந்தது?
2 மாதங்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேசம், அலிகார் மட்ராக் பகுதியில் ஒரு சம்பவம் நடந்தது.. அங்குள்ள ஒரு பெண்ணுக்கு, இளைஞர் ஒருவரை பார்த்து பேசி, திருமணம் செய்ய நிச்சயமும் செய்திருந்தனர்.

மகளின் திருமணம்
மகளின் திருமண வரவேற்பு, கல்யாணம் தொடர்பாக, வருங்கால மாப்பிள்ளையுடன், மகளின் அம்மா அடிக்கடி போனில் பேசி வந்தார்.. இதனால் பெண்ணின் அம்மாவுக்கும், மாப்பிள்ளைக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது.. மணமகளை விட அவரது அம்மா அழகாக இருப்பாராம்.. ஒருகட்டத்தில் இந்த நட்பு திடீரென காதலாக மாறியது.
ஒருகட்டத்தில் மருமகனுடன் கிளம்பி சென்றுவிட்டார் மாமியார்.. திருமணத்திற்கு ஒரு வாரம் உள்ள நிலையில், மருமகனுடன் ஓட்டம் பிடித்தது, மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது. பிறகு போலீசில் இரு குடும்பத்தினரும் புகார் தந்தனர்..
குடிகார கணவர்
போலீசாரும் ஓடிப்போன மாமியார், இளைஞரை தேடிப்பிடித்து விசாரித்தனர். அப்போது மாமியார் போலீசாரிடம், தன் குடிகார கணவரின் டார்ச்சர் தாங்காமல், மகளுக்காக நிச்சயித்திருந்த இளைஞருடன் ஓடிச்சென்றதாகவும், தனக்கு விவாகரத்து நடந்தாலும் இல்லாவிட்டாலும், இளைஞருடனேயே வாழ விரும்புவதாகவும், திடமாக கூறிவிட்டார். இதுபோலவே இப்போதும் ஒரு சம்பவம், இதே உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
ஷகீல் -ஷபனா என்ற தம்பதிக்கு 6 குழந்தைகள் இருக்கிறார்கள்.. 55 வயதான ஷகீல் ஒரு தொழிலதிபராவார்.. இந்தநிலையில் தன்னுடைய 15 வயது மகனுக்கு, பக்கத்து கிராமத்திலேயே பெண் பார்த்து வந்தார் ஷகீல்..
15 வயது சிறுவன்
15 வயது சிறுவனுக்கு, யாருமே பெண் தரவில்லை.. ஒருவழியாக பெண் வீட்டார் ஒருவரை பேசிய சம்மதிக்க வைத்தார் ஷகீல்.. தன் மகனுக்கும், அந்த பெண்ணுக்கும் திருமண நிச்சயமும் செய்து வைத்தார்.
நிச்சயதார்த்தம் முடிந்து சில நாட்களில் அந்த 15 வயது மகன், தன்னுடைய அப்பாவின் செல்போனை தற்செயலாக எடுத்து பார்த்தார். அதில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன், தன்னுடைய அப்பா ஆபாசமாக பேசியிருந்த வீடியோக்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. விரசமாக பேசிய ஏராளமான ஆடியோ மெசேஜ்களையும் கேட்டு நிலைகுலைந்து போனார் 15 வயது சிறுவன். இனிமேல் நான் அந்த பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதனால் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது.. இதுகுறித்து யாராவது பேசுவார்கள் என்று 15 வயது சிறுவன் எதிர்பார்த்தார்.. ஆனால், திடீரென யாருமே எதிர்பார்க்காத நிலையில், மகனுக்காக அந்த பெண்ணையே ஷகீல் திருமணம் செய்து கொண்டு வந்து நின்றார்..
இதைப்பார்த்ததுமே, ஷகீலின் மனைவி ஷபானா அதிர்ச்சி அடைந்தார்.. உடனே கணவர் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கண்ணீர் மனைவி
இந்த சம்பவம் தொடர்பாக ஷகீலின் மனைவி ஷபானா செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "என்னுடைய கணவர், யாரோ ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டேயிருந்தார்.. அப்போதே எனக்கு சந்தேகம் வந்தது. பிறகு நாளெல்லாம் அந்த பெண்ணுடனேயே வீடியோவில் பேசிக் கொண்டிருந்தார்.. பிறகு இதுகுறித்து என் மகனிடமும் சொன்னேன்.. நாங்கள் இருவருமே 2 முறை கையும் களவுமாக பிடித்து, இதுகுறித்து கேள்வி கேட்டோம்.
அதற்கு என்னையும் கண்மூடித்தனமாக தாக்கினார்.. என்னை வீட்டை விட்டு வெளியேறியது மட்டுமல்லாமல், அந்தப் பெண்ணை திருமணம் செய்வதற்கு முன்பு ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 17 கிராம் தங்கத்தையும் எடுத்துச் சென்றார் என்று கண்ணீர் மல்க கூறினார்..












Click it and Unblock the Notifications