கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றிய காதலியின் தாய்.. துடிதுடித்த இளைஞர்.. காவேரிப்பாக்கத்தில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே காதலியை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற இளைஞர் மீது, காதலியின் தாய் கொதிக்கும் எண்ணெயை முகத்தில் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த ஆயர்பாடி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் கண்ணன் (19). இவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் லோகேஷ் காவேரிப்பாக்கம் பகுதியிலுள்ள முகமது தமீம் தம்பதியரின் மகளான நட்சத்திரா (18) என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Ranipet Love Affair Attack

காதலியிடம் பேசமாலிருக்க மறுப்பு

இதற்கிடையே லோகேஷ் தனது காதலியான நட்சத்திராவை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, நட்சத்திராவின் தாயார் முகமது தமீம் நட்சத்திராவிடம் பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று லோகேஷிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு லோகேஷ் மறுப்பு தெரிவித்ததால் ஒருகட்டத்தில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொதிக்கும் எண்ணெய்

இதனால், ஆத்திரமடைந்த காதலியின் தாயார் முகமது தமீம் வீட்டிற்குள் சென்று கொதிக்கும் எண்ணெயை லோகேஷ் கண்ணன் முகத்தில் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்து அலறி துடிதுடித்த லோகேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேல்சிகிச்சை

பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கும்பாறை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+