போலீஸ் அதோ அங்கதான் நிற்குது தல.. ஹெல்மெட் போடு.. சென்னை மக்களை அலர்ட் செய்யும் "கூகுள் மேப்"
சென்னை: சென்னை போக்குவரத்து போலீசார் தினசரி எங்கெல்லாம் வாகன சோதனை செய்வார்களோ அந்த இடங்களை எல்லாம் கூகுள் லோக்கசனில் நெட்டிசன்கள் அலர்ட் செய்கிறார்கள் வாகன ஓட்டிகள். இங்கு போலீஸ் சோதனை செய்வார்கள், ஹெல்மெட் போடு என்று அலர்ட் செய்து இடங்களை காண்பிக்கிறார்கள். இதை பார்க்கும் வாகன ஓட்டிகன் போலீசாரின் வாகன சோதனையின் தப்பிக்கிறார்கள்.
சென்னை மாநகரத்தில் தினசரி வாகனத்தில் பயணிப்போருக்கு எங்கெல்லாம் போலீஸார் சோதனை செய்வார்கள் என்பது நன்றாகவே தெரியும். அதே நேரம் ஒரு குறிப்பிட்ட சாலைகளில் மட்டும் பயணித்து வீடு திரும்புவோருக்கு அந்த பகுதியை பற்றி மட்டுமே தெரியும். மற்றவர்களுக்கு சென்னையில் வாகன சோதனை எங்கெல்லாம் நடக்கும் என்று தெரியாது.

இதனால் புதிதாக செல்லும் போது, சில பகுதிகளில் வாகன சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் சென்று வாகன ஓட்டிகள் சிக்கி கொள்கிறார்கள். இப்படி ஏராளமான வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணியாமல் சென்று இன்று வரை சிக்கித்தான் வருகிறார்கள். காவல்துறை அவர்களுக்கு ஹெல்மெட் அணியாத குற்றத்திற்காக அபராதம் விதிக்கிறது. சில வாகனங்களில் முன்னால் உட்கார்ந்திருப்பவர் ஹெல்மெட் அணிந்தாலும் பின்னால் அமர்ந்திருப்பர் ஹெல்மெட் அணியாமல் செல்வார். இதன் காரணமாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
ஹெல்மெட் மட்டுமின்றி, இருசக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால், இன்சூரன்ஸ் இல்லாவிட்டாலும் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும். பெரிய வாகனங்களை பொறுத்தவரை அதிக பாரம் ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள் விதிமுறைகளை மீறும் போது அபராதம் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதேபோல் கார் உரிமையாளர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அல்லது காருக்கு இன்சூரன்ஸ் காலாவதி ஆகியிருந்தால் அபராதம் கட்ட வேண்டியதிருக்கும். எல்லா வாகனங்களையும் போலீசார் வாகன சோதனையில் பிடிப்பார்கள் என்றாலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தான் அதிகம் சிக்குகிறார்கள்.
பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் போலீசாரின் வாகன சோதனையை தவிர்க்கவே விரும்புகிறார்கள். எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும், அவசரமாக வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், சோதனையில் இருந்து தப்பிக்க புதிய முயற்சிகளை செய்கிறார்கள். அப்படித்தான் சென்னை போக்குவரத்து போலீசார் தினசரி எங்கெல்லாம் வாக சோதனை செய்வார்களோ அந்த இடங்களை எல்லாம் கூகுள் லோக்கசனில் நெட்டிசன்கள் அலர்ட் செய்கிறார்கள். இங்கு போலீஸ் சோதனை செய்வார்கள், ஹெல்மெட் போடு என்று அலார்ட் செய்து இடங்களை காண்பிக்கிறார்கள்.
இதை பார்க்கும் வாகன ஓட்டிகள் உடனே அந்த பாதையை தவிர்த்து வேறு பாதையில் செல்கிறார்கள்.. இல்லாவிட்டால் வாகன சோதனையின் போது மட்டும் ஹெல்மட் அணிகிறார்கள். அதேநேரம் காலவதியான இன்சூரன்ஸ், வாகனத்திற்கு ஒழுங்கான ஆவணங்கள் இல்லாதவர்கள் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைத்து, அதற்காக கூகுளையும் அவர்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அண்மையில் பெங்களூர் நகரில் எங்கெல்லாம் போலீஸ் சோதனை செய்வார்களோ அந்த இடங்களை கூகுள் காட்டியது. அதே பாணியில் தான் சென்னையில் கூகுள் தற்போது போலீஸ் சோதனை செய்யும் இடங்களை காட்டுகிறது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications