அதிமுக காலி.. தவெக தான் எதிர்க்கட்சி.. அடித்து சொல்லும் ஜோதிமணி
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் கிரீஷ் சோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார்கள். இந்நிலையில் வருகிற தேர்தலில் தவெக இரண்டாம் இடம் பிடிக்கும். விஜய்க்கு இளைஞர்களிடம் ஆதரவு அதிகமாக உள்ளது என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார்.
கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறாது என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். வருகின்றன தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளை பாஜக கபளீகரம் செய்து வருகிறார்கள். அவர்களை காலி செய்துவிட்டு பாஜக பதவிக்கு வந்து கொண்டிருக்கிறது. அப்படித்தான் பீகாரில் நிதிஷ்குமாரை பதவி விலக வைத்துள்ளனர். [MP Jothimani]

பாஜகவால் அதிமுக பாதிப்பு
விரைவில் பீகால் பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராக பதவி அமர்த்தப்படுவார். அசாம் கண பரிஷத், பகுஜன் சமாஜ், சிவசேனா, ஹரியானா விகாஸ் கட்சி, ஜனதா தளம், அகாலி தளம் என்று பாஜக கபளீகரம் செய்த கூட்டணிக் கட்சிகளின் பட்டியல் மிகவும் நீளமானது. இந்த வரிசையில் விரைவில் அதிமுக இடம்பெறும். பாஜகவின் அடுத்த டார்கெட் அதிமுக தான்.
ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அவர் எங்கள் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு கவலை வேண்டாம். அந்த மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் நட்சத்திர பேச்சாளராக ஆர்.என். ரவி செயல்படுவார். அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அவர் உறுதுணையாக இருப்பார். அவரின் தமிழர் விரோத போக்கு தமிழ் மக்களால் விரும்பப்படாத ஒன்று.
தவெக இரண்டாமிடம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி 3 வது இடத்திற்கு தள்ளப்படும். இளைஞர்களின் ஆதரவு தவெக தலைவர் விஜய்க்கு அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக இரண்டாவது இடத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணிக்கு தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள். தமிழகத்தில் அதிமுக எதிர்கொள்ளும் கடைசி தேர்தலாக இது இருக்கும்" என்றார்.
ஜோதிமணியின் இந்தக் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக - பாஜகவினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மறுபக்கம் திமுகவினரும் கூட, "காங்கிரஸில் இன்னும் சிலருக்கு தவெக பாசம் போகவில்லை" என்று கூறியுள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்












Click it and Unblock the Notifications