ராஜ்ய சபா போனபின்.. நாடாளுமன்றத்தில் முதல்முறையாக கேள்வி கேட்ட கமல்.. படாரென எழுந்த நிதின் கட்கரி
சென்னை: ராஜ்ய சபா எம்பியாக நியமிக்கப்பட்டு உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதல்முறையாக இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அவரின் கேள்விக்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார்.
20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாகன உரிமையாளர்கள் மத்தியில் பல்வேறு கவலைகள் எழுந்துள்ளன. எரிபொருள் செலவு அதிகரிப்பது, வாகனத்தின் செயல்திறன் மந்தமாவது, பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பது போன்ற புகார்களைப் பலர் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக பலரும் மைலேஜ் குறைந்துவிட்டது.. வண்டி திடீர் என்று பவர் இல்லாமல் குறைந்துவிட்டது என்று விமர்சனங்கள் வைக்கின்றனர். பெரும்பாலான இந்திய சாலைகளில் ஓடும் வாகனங்கள் இன்னும் E20 ஏற்றவை அல்ல என்பதால், சேவை மையங்கள் இயந்திர தேய்மானம் மற்றும் கேஸ்கெட் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதாகக் கூறுகின்றன. இதனால் நுகர்வோர் பாகங்களை மறுசீரமைக்கவோ அல்லது மாற்றவோ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
20% எத்தனால் கலந்த பெட்ரோல்
20% எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக காரின் மைலேஜ் 11-12 கிமீ/லிட்டரில் இருந்து 7-8 கிமீ/லிட்டராகக் குறைந்ததாக பலரும் தெரிவித்துள்ளனர். 20% எத்தனால் கலந்த பெட்ரோல் எடை கூடுதலாக உள்ளது. அதோடு பவர் இல்லை. மைலேஜ் குறைந்துவிட்டது என்று கூறுகின்றனர்.
பலரும் தங்கள் காரின் மைலேஜ் 20% குறைந்ததாகவும், அத்துடன் வாகனம் தடுமாறுவது மற்றும் வேகம் குறைவாக இருப்பதையும் தெரிவித்துள்ளனர். E20 அல்லாத வாகனங்களில் எரிபொருள் சிக்கனம் சுமார் 7% குறையலாம் என்று தொழில்துறை நிர்வாகிகள் மதிப்பிடுகின்றனர். இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆய்வுகள் 1-6% மைலேஜ் குறைவதைக் காட்டுகின்றன.
கமல்ஹாசன் எத்தனால் கலப்பு குறித்து கேள்வி
ராஜ்ய சபா எம்பியாக நியமிக்கப்பட்டு உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று முதல்முறையாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 20% எத்தனால் கலந்த பெட்ரோல்
குறித்த அவரின் கேள்விக்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார்.
E20 பெட்ரோலால் எஞ்சின்களில் ஏற்படும் தாக்கம் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா? E10 பெட்ரோல் நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்ன? E20 பயன்படுத்துவதால் வாகன சேதம், செயல்பாடு, செலவுகள் தொடர்பாக உத்தரவாதம், காப்பீடு, பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்கள் உள்ளதா? எத்தனாலின் விலை மலிவுத்தன்மையை அரசு மதிப்பீடு செய்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
மாநிலங்களவையில் எம்.பி.யாக கமல்ஹாசன் எழுப்பிய முதல் கேள்விக்கு, எழுத்துப்பூர்வ மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார்.
எத்தனால் பெட்ரோல் கலப்பு - மத்திய அரசு விளக்கம்
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதால் (E20) மைலேஜ் குறையும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனால் வாகனத்திற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பழைய வாகனங்கள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் தொடர்பான பல கவலைகள் ஊடகங்களில் எழுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கவலைகள் பெரும்பாலும் அறிவியல் ஆதாரங்கள் அல்லது நிபுணர் ஆய்வுகளால் ஆதரிக்கப்படாத, அடிப்படையற்ற கூற்றுகள் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
எத்தனால் கலந்த பெட்ரோலால் பெரிய அளவில் மைலேஜ் குறையும் என்பது உண்மையல்ல; 4 சக்கர வாகனங்களுக்கு 1 - 2% மற்ற வாகனங்களுக்கு 3 - 6% வரை மைலேஜ் குறைய வாய்ப்பு; எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களின் என்ஜின் பாதிக்கப்படும் என்பதில் உண்மையில்லை என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
எத்தனால்-பெட்ரோல் கலவை
கார்புரேட்டட் மற்றும் எரிபொருள்-உட்செலுத்தப்பட்ட வாகனங்களை 10,000 கி.மீ.க்கு ஒருமுறை சோதனை செய்து, அவற்றின் முதல் 100,000 கி.மீ. பயன்பாட்டில் எத்தனால்-பெட்ரோல் கலவைகளின் செயல்பாடு குறித்து சர்வதேச ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகளின் முடிவில், சக்தி, முறுக்குவிசை மற்றும் எரிபொருள் நுகர்வு ஆகியவற்றில் புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்தியாவின் ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி சங்கம் (ARAI), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோலியம் (IIP) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (R&D) ஆகியவை நடத்திய பொருள் பொருந்தக்கூடிய தன்மை மற்றும் இயக்கத்தன்மை சோதனைகளில், பழைய வாகனங்கள்கூட E20 எரிபொருளில் இயங்கும்போது குறிப்பிடத்தக்க மாறுபாடுகள், செயல்திறன் சிக்கல்கள் அல்லது அசாதாரண தேய்மானம் ஆகியவற்றை வெளிப்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், E20 எரிபொருள் வெப்ப மற்றும் குளிர் தொடக்கச் சோதனைகளில் எந்த இயந்திர சேதமும் இல்லாமல் தேர்ச்சி பெற்றது., என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications