100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்த போகிறீர்களா.. மக்களவையில் கொந்தளித்த விசிக எம்பி ரவிக்குமார்
சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்த போகிறார்களா என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் 100 நாள் வேலைத் திட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடுமையாக குறைக்கப்பட்டிருப்பதாக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் 100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்த போகிறீர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ரவிக்குமார் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2021 - 22 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அந்தத் திட்டத்திற்கு 98,467.85 கோடி ஒதுக்கப்பட்டது, 2022-23 பட்ஜெட்டில் அது 73 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டது.

60 ஆயிரம் கோடி
இன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அதற்கான நிதியை 60 ஆயிரம் கோடியாகக் குறைத்திருக்கிறார்கள். 100 நாள் வேலை திட்டம் என்று அது அழைக்கப்பட்டாலும் மிகக் குறைவாக நிதி ஒதுக்கப்படுவதால் இதில் பதிவு செய்துகொண்டு வேலை செய்யும் குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக ஆண்டுக்கு 20 நாட்கள் தான் வேலை கிடைக்கிறது. இப்போது மேலும் நிதி குறைக்கப்பட்டு இருப்பதால் இதில் 10 நாட்களுக்குக் கூட வேலை கொடுக்க முடியாது.

வறுமை ஒழிப்பு
கிராமப்புற ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மோடி அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருக்கிறது. கிராமப்புற ஏழைகளின் வயிற்றிலடிக்கும் மோடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்." என்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் பொதுமக்களுக்கு கட்டாயம் 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 75 சதவீதம் மத்திய அரசு வழங்குகிறது. மீதமுள்ள 25 சதவீதத்தை மாநில அரசு வழங்குிறது.

ரூ 674 கோடி
இந்த திட்டத்திற்காக ரூ 674 கேோடியை மத்திய அரசு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மாநில அரசின் பங்கான 25 சதவீதம் அதாவது ரூ 224 கோடியை தமிழக அரசு கடந்த ஆண்டு விடுவித்தது. இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி ஆண், பெண் இருபாலருக்கும் தினசரி ரூ 281 ஆக ஊதியம் உயர்த்தப்பட்து.












Click it and Unblock the Notifications