நீங்க லாபமடைய தொழிலாளர்களின் மனைவியை கொச்சைப்படுத்துவீங்களா?.. எல்&டி தலைவரை வெளுத்த சு.வெங்கடேசன்
சென்னை: எல் அண்ட் டி தலைவர் தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார். நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ அந்த லாப வெறியை முறிக்கத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பார்க்கிறது என்று எம்பி சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரபல தொழில் ஐடி நிறுவனமாக இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் தொழிலாளர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று கூறியிருந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இதுதொடர்பாக எல் அண்ட் டி செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில், வாரத்திற்கு 90 மணி நேர வேலை என்ற எல் & டி நிறுவன தலைவரின் கருத்து மிகப்பெரிய லட்சியத்தை பிரதிபலிக்கிறது. அசாத்தியமான உழைப்பை போட்டால் தான் அசாத்தியமான பலன்கள் கிடைக்கும் என்று எல் அண்ட் டி தலைவரின் கருத்தை ஆதரித்து விளக்கம் தெரிவித்துள்ளார்.
எல் அண்ட் டி தலைவரின் கருத்துக்கு பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இதனைக் கண்டித்து எம்பி சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சு வெங்கடேசன் எம்பி கூறியுள்ளதாவது: வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளார். தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய வருடத்தை விட 43 சதவிகித உயர்வு.
தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார். அலெக்சாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா? சுப்பிரமணியன்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதால் தான். தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா?.
நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான் இது போன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான். நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டு வரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications