காயத்ரி! நீங்களே சொல்லுங்க! உள்ளே தூக்கி வச்சிட்டா போச்சு! உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன்? திமுக எம்பி
சென்னை: அடுத்து யாரை தூக்கி வைக்கலாம்னு நீங்களே சொல்லுங்கள் என சவுதாமணி கைதுக்கு பொங்கிய காயத்ரி ரகுராமுக்கு திமுக எம்பி செந்தில் குமார் பதிலடி கொடுத்தார்.
மத கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் சவுதாமணி ட்வீட் வெளியிட்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது அந்த மனுவை நீதிபதி பொங்கியப்பன் விசாரணை நடத்தினார்.

சவுதாமணி
அப்போது விசாரணையில் சவுதாமணி பதிவிட்ட வீடியோவால் மதக்கலவரம் தூண்டப்படும் என்பதை உறுதி செய்த காவல் துறையினர் அவர் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ வழக்குப் பதிவு செய்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

முன்ஜாமீன் மனு
இதையடுத்து மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் புதிதாக முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி சவுதாமணி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.

சவுதாமணி கைது
அந்த மனுவை விசாரித்த நீதிபதி சமுதாயத்தில் உயர் இடத்தில் இருக்கும் படித்தவரே இது போன்ற தவறை செய்யலாமா என கேள்வி எழுப்பி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையில் கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை என சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் சவுதாமணி சைபர் கிரைம் போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
|
பொங்கிய காயத்ரி
இந்த கைதுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருக்கும் காயத்ரி ரகுராம் ட்விட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில சவுதாமணி கைது திமுக அரசின் பழிவாங்கும் செயல். இதை நான் கண்டிக்கிறேன். திமுகவின் இலக்கு எளிதானவர்களை நோக்கியே இருக்கிறது என தெரிவித்திருந்தார்.
|
செந்தில் குமார் பதிலடி
இதற்கு திமுக எம்பி செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், சரி நீங்களே உங்களுக்கு தெரிஞ்ச ஒரு கஷ்டமான இலக்கை சொல்லுங்க, உங்க ஆசைக்கு உள்ளே தூக்கி வச்சிட்டா போச்சு என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications