அன்னையும் அத்தனுமற்ற வாழ்வில் என்றும் தலைப்படுவேன் என் தம்பி தோளில்.. "கண்ணு"க்கு தமிழச்சி வாழ்த்து
சென்னை: தமிழக தொழில்துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவின் பிறந்த நாளையொட்டி அவரது சகோதரியும் திமுக மக்களவை எம்பியுமான தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழச்சி தங்கபாண்டியன் தமிழில் புலமை பெற்றவர். கவிஞர், அரசியல்வாதி, எழுத்தாளர். சிறந்த பேச்சாளர் என்ற பன்முகத்திறமைகளை பெற்றவர். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ராணி மேரி கல்லூரியில் ஆங்கிலத் துறையின் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவரது இயற்பெயர் சுமதி. இவரது சகோதரர் தமிழக அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு ஆவார். தமிழச்சி தங்கபாண்டியனின் தாய் ராஜாமணி கடந்த 2020 ஆம் ஆண்டு காலமானார்.

தாய் பிறந்தநாள்
ராஜாமணியின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு அவரது சமாதியில் வழிபட்டுவிட்டு தமிழச்சி ஒரு உருக்கமான கவிதையை எழுதியிருந்தார். அம்மாவின் தொலைபேசி எண்ணை அழுத்துகிறேன். அழைப்பை ஏற்க இயலாத இடத்தில் அவளிருப்பதை பதிவுக் குரல் உறுதி செய்கையில் தவறவிட்ட அழைப்புகளை எப்படிப் பார்ப்பதென அவளுக்குச் சொல்லித் தந்த பின்னிரவு அவளது சன்னக்குரலின் குழந்தமையுடன்.

சோம்பல்
அலுவலில், அவசர அரைச்சலில், சோம்பலில் என நான் தவற விட்ட அவளது அழைப்புகளை அறிந்த தொலைபேசியின் மௌனக் குரல் என் குற்றவுணர்வின் செதில் பிளக்கிறது. காத்திருக்க ஆளில்லாத வீட்டின் நாற்காலியும் பரிமாறும் கரங்களற்ற உணவு மேசையும் இயக்கப்படாத தொலைக்காட்சிப் பெட்டியும் நிதானித்து நடக்கின்ற பாதம் தொடாத் தரையும் அவளின் இல்லாமையில் விக்கித்திருக்கின்றன.

தவறவிட்ட அழைப்புகள்
ஐம்புலன்களிலும் என்னை வரித்து வளர்த்தெடுத்த அவளின் அண்மையற்ற நிர்கதியின் சுடுமணலில் புரண்டு என் அழுகை வெடிக்கின்றது. கண்கலங்கப் பொறுக்காத பதைபதைப்பின் தாய்மடி தேடிய முகத்தை மூடும் அவளின் கரிசல் மண் கவுச்சிச் சேலைக்கு விலையேது? ஏற்கவே இயலாத அவளின் தொலைபேசி எண்ணிற்கு மறுபடி அழைக்கிறேன். தவறவிட்ட அழைப்புக்களை அம்மா ஒருபோதும் மறந்ததில்லை. பிறந்த_நாள்_வாழ்த்துகள்_அம்மா என்று தனது தாயின் பிறந்தநாளில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை வடித்திருந்தார்.

சகோதரனுக்கு வாழ்த்து
இவரது கவிதை தாய் இல்லாத எத்தனை பேருக்கு பெரும் ஆறுதல் வார்த்தைகளாகவும் நெகிழ்ச்சியான தருணத்தையும் கொடுத்தது. இந்த நிலையில் தற்போது தமிழச்சி தனது சகோதரனும் அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டரில் கவிதையாக அவர் வடித்த வாழ்த்தில், என் கண்ணீர் காணப் பொறுக்காதவன்
என் சிரிப்பின் விலை உலகென்றாலும் பெற்றுத் தரத் துணிபவன்
என் குறைகளின் கனமுடன் என்னைத் தாங்கிச்
சுமப்பவன்
என் நிறை கண்டால் பூரித்துப் பூப்பவன்
என் அத்தானின் அணுக்கக் கவசம்
என் மகள்களின் யானைபலத் தாய்மாமன்
அன்னையும் அத்தனுமற்ற
என் வாழ்வில் என்றென்றும்
தலைப்படுவேன்
என் தம்பியின் தோளில்
எனும் பெருமையுடன்...

பிறந்தநாள் வாழ்த்துகள் “கண்ணு”
என தனது வாழ்த்தில் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் கல்லூரி காலங்களில் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications