ஆகாஷ் அம்பானி திருமணம்.. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்த முகேஷ் அம்பானி!

தனது மகனின் திருமணத்திற்காக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மகனின் திருமணத்திற்காக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. ஆகாஷ் அம்பானிக்கும் ஷ்லோக மேத்தா என்ற அவரது பள்ளிக்கால தோழிக்கும் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

Mr Ambani invites DMK chief MK Stalin for his sons marriage event

இதையடுத்து தற்போது நடக்க உள்ள திருமணத்திற்கு முகேஷ் அம்பானி தனது மனைவி நீத்தா அம்பானியுடன் சேர்ந்து பலருக்கும் திருமண அழைப்பிதழ் அளித்து வருகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மிக முக்கியமான தலைவர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் அளித்து வருகிறார்.

Mr Ambani invites DMK chief MK Stalin for his sons marriage event

இந்த நிலையில் நேற்று இவர்கள் தமிழகம் வந்து சில முக்கிய தொழிலதிபர்களை சந்தித்தனர். அதன்பின் திமுக தலைவர் ஸ்டாலினின் இல்லம் சென்று அவர்களுடன் சந்திப்பு நடத்தினார்கள். ஆகாஷ் அம்பானியின் திருமணத்திற்கான அழைப்பிதழ் ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது.

Mr Ambani invites DMK chief MK Stalin for his sons marriage event

இதுகுறித்து டிவிட் செய்துள்ள ஸ்டாலின், இந்த சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி இருக்கிறார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரை பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. பல முக்கியஸ்தர்கள் வர இருப்பதால் இந்த திருமண நிகழ்வு முக்கியமான நிகழ்ச்சியாக மாறி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+