திமுகவை சாய்க்க.. டெல்லிக்கே "லெட்டர்" போட்ட சு.சாமி! முடிஞ்சா தொட்டு பாருங்க.. சீறிய திமுக எம்பி!
சென்னை: திமுக கட்சியை தேர்தல் ஆணையம் தங்கள் பதிவில் இருந்து நீக்க வேண்டும், அவர்களின் சின்னத்தை பறிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சுப்பிரமணியன் சாமியின் கருத்துக்கு திமுக எம்பி செந்தில் குமார் சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக எப்போதும் கடுமையான விமர்சனங்களை வைப்பவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி.
சமீபத்தில் கூட கார்த்திக் கோபிநாத் கைதில் அரசுக்கு எதிராக கடுமையான வாதங்களை வைத்தார். அரசுக்கு எதிராக வாதிட தயார் என்றும் அவர் கூறி இருந்தார்.

சு. சாமி கடிதம்
இந்த நிலையில்தான், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, நேற்று திமுகவிற்கு எதிராக இந்திய துணை தேர்தல் ஆணையர் மிசாவ்விற்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், திமுக செயலாளர் தேர்தல் ஆணைய விதிகளை மீறிவிட்டார். பிராமணர்களை அழித்தொழிக்க வேண்டும். அவர்களை இன ஒழிப்பு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். திராவிட இயக்கத்தை தொடங்கிய பெரியாரின் கொள்கை அது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

பிராமணர்கள்
இதனால் பிராமணர்கள் தமிழ்நாட்டில் தங்கள் வாக்கு உரிமையை செலுத்த முடியாத நிலை கூட ஏற்படலாம். இதை பயன்படுத்தி திமுக பல்வேறு தொகுதிகளில் வெற்றிபெற திட்டமிடுகிறது. இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும். சட்ட ரீதியாக இது தொடர்பான ஆவணங்களை அளிக்கவும், கோப்புகளை தரவும், சட்ட ஆலோசனைகளை வழங்கவும் நான் தயார். திமுகவின் பதிவை தேர்தல் ஆணையத்தில் இருந்து நீக்க வேண்டும்.

கட்சி நீக்கம்
அவர்களின் உதய சூரிய சின்னத்தை பறிக்க வேண்டும். இது மிகவும் அவசரமான விஷயம், என்று சுப்பிரமணியன் சாமி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி தேர்தல் ஆணையத்தில் திமுக செய்துள்ள பதிவை நீக்க வேண்டும். அதை கட்சி இல்லை என்று அறிவிக்க வேண்டும் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். திமுகவினர் பலர் சுப்பிரமணியன் சாமியின் இந்த செயலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். திமுகவை உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

செந்தில் குமார் பதிலடி
திமுக எம்பி செந்தில் குமாரும், சுப்பிரமணியன் சாமிக்கு இதேபோல் பதிலடி கொடுத்துள்ளார். அதில், முடிந்தால் தொட்டு பாருங்கள் மிஸ்டர். சுப்பிரமணியம். ஊர் பக்கம் பல பழமொழி சொல்லுவாங்க. அதில் decent ஆன பழமொழி இது. "கூரை ஏறிக் கோழி பிடிக்க இயலாதவரா, வானம் ஏறி வைகுந்தம் காட்டப் போகிறார்? குட் ஜோக்!. என்று சுப்பிரமணியன் சாமியை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.


Click it and Unblock the Notifications
