வேளாண் பட்ஜெட்: பெரும்சாமை, தட்டை வரகா? இத்தனை சிறுதானியங்களா? ஆயுசுக்கும் ஹெல்தியா இருக்கலாமே
சென்னை: பாரம்பரிய சிறுதானியங்களின் ரகங்கள் பாதுகாக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தனது உரையில் கூறியதாவது: நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் பாரம்பரிய நெல் ரகங்களான 60-ஆம் குறுவை, பூங்கார், தூயமல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, சீவன் சம்பா, கருப்புக் கவுனி போன்றவற்றின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

இந்த திட்டத்தில் 2023- 2024ஆம் ஆண்டில் 20979 விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை 12,400 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்து பயனடைந்தனர். 2024- 2025 ஆம் ஆண்டில் மாநில அரசு விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு 2025-2026ஆம் ஆண்டில் 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யும் வகையில் 200 மெட்ரிக் விதைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.
இதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். புரதம் , நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஆகியவை அதிகம் உள்ள பாரம்பரிய சிறுதானியங்கள், பயறு வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உடல் எடையை குறைக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் செய்கின்றன.
எனவே சேலம், கரூர் மாவட்டங்களில் தலைவிரிச்சான் சோளம், வெள்ளைச் சோளம், இருங்கு சோளம், செஞ்சோளமும் தூத்துக்குடி மாவட்டத்தில் காக்காச்சோளமும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் வெண்சுருட்டை கேழ்வரகு, கருஞ்சுருட்டை கேழ்வரகு, கரிக்கட்டை கேழ்வரகு, பூவாடன் கேழ்வரகு, குருவிக்காரன் கம்பு, காட்டுக் கம்பு, தட்டை வரகு, பெரும்சாமை, சடை சாமை, சிட்டன் சாமை, கருஞ்சிட்டன் சாமை, நாட்டுத் துவரை, மலைத் துவரை ஆகியவற்றையும் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் நாட்டு உளுந்து, கொடி உளுந்து ஆகிய ரகங்களின் விதைகளையும் கண்டறிந்து சேகரித்து அரசு மாநில விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு பாரம்பரிய ரகங்கள் பாதுகாக்கப்படும். இவை புதிய ரகங்களை உருவாக்கிடவும் பயன்பாட்டிலுள்ள ரகங்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.
உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்கப்பட்டு இதர விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும். இதற்கென 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் காடுகள் திட்டத்தில் ரூ 13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சுமார் 25 பக்கங்கள் கொண்ட பட்ஜெட் உரையை இரண்டு மணி நேரங்கள் வாசித்திருந்தார். இதில் மொத்தம் 80 அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications