ரீல்ஸ் மோகம் 30 நாள்.. கல்தா கொடுத்த கம்யூனிஸ்ட்கள்! ரிவர்ஸ் மாடல் ஆட்சி! விட்டு விளாசிய எம்ஆர்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றி கழக ஆட்சி ரிவர்ஸ் மற்றும் டைவர்ஷன் மாடல் ஆட்சியாக உள்ளதாகவும்,
முதலமைச்சர், அமைச்சரின் செயல்பாடுகள் பின்னோக்கி செல்வதால் அதற்கு முட்டு கொடுக்க கூடாது என்பதற்காகவும், ஆதரவை கொடுக்க கூடாது என்பதால் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களின் கூட்டணியிலிருந்து விலகுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், திமுக எம்எல்ஏ லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

MRK Panneerselvam Attacks Vijay

அதனை தொடர்ந்து பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்," முதல்வர் விஜய் லண்டன் சென்றது குறித்து புதிது புதிதாக செய்தி வருகிறது. அங்கு பிரச்சினையான செய்தியை மறைப்பதற்கு என்னன்னமோ செய்கிறார்கள்.

எம்ஆர்கே பன்னீர்செல்வம்

ரீல்ஸ் மோகம். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள். தவெக ஆட்சி செய்து 100 நாட்கள் 120 நாட்கள் ஆகிறது. எதுக்காக வாக்களித்தோம் என்று தெரியாமலையே மக்கள் தவெகவிற்கு வாக்களித்தார்கள். ஏன் வாக்களித்தோம் என்பது தான் அவர்கள் ஆட்சியின் சாதனை. அது சோதனையாக உள்ளது. திமுக ஸ்டாலின் ஆட்சியில் மக்களின் அடிப்படை கட்டமைப்பினை உருவாக்கி கொடுத்தார்கள்.

ரிவர்ஸ் மாடல்

இவர்கள் ஆட்சியில் தமிழகம் முன்னோக்கிச் சென்றது.இப்போது பின்னோக்கி செல்கிறது. ரீல் மாடல் ஆட்சி ரிவர்ஸ் மாடலாக உள்ளதால் தமிழகம் பின்னோக்கிச் செல்கிறது. பரந்தூர் விமான நிலையம் ஆரம்பிப்பதால் தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி கிடைக்ககூடிய நிலை இருந்தது, அதற்காக பிள்ளையார் சுழி போடப்பட்டு ஆரம்பிக்கும் நிலை இருந்தது தவெக ஆட்சியில் அதனை ரத்து செய்து விட்டு புதிய விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்வார்கள்.

பரந்தூர் விமான நிலையம்

அதற்கு விளைநிலத்தையும் தேர்வு செய்ய வேண்டும். விளை நிலம் இல்லாத இடம் தமிழகத்தில் இல்லை. வாக்குறுத்தி அளித்துவிட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யபட்டுள்ளதால் அதனால் தொழில் வளர்ச்சி பின்னோக்கி சென்றுவிட்டது. தமிழகத்திற்கு வந்த தொழில் நிறுவனங்கள் ஆந்திராவிற்கு சென்று விட்டது.

தொழில் துறை அமைச்சர்

திட்டம் போடவேண்டும் என்றால் அந்த துறையின் அமைச்சர் இருக்க வேண்டும். தொழில் முதலீடுகளை ஈர்க்க முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சென்றபோது அவருடன் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இருந்தார்கள். ஆனால் இன்று விஜய் லண்டன் சென்றிருக்கிறார். அவருடன் அமைச்சர் சென்றிருக்க வேண்டும். தொழில் துறை செயலாளர் சென்றிருக்க வேண்டும். ஆனால் செல்லவில்லை.

முதல்வர் விஜய்

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் சென்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக நாடகம் நடத்துகிறார்கள். அது கருணாநிதி காலத்திலையே போடப்பட்டது என்று மக்களுக்கு தெரிந்திருக்கிறது. இதனை எல்லாம் மறைப்பதற்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்கிறார்கள். இது எல்லாம் டைவர்சஷன் தான் இது டைவர்சஷன் ஆட்சியாக தான் உள்ளதாக தெரிவித்தார்.

தவெக ஆட்சி

தவெக ஆட்சியில் மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் வரவில்லை. மறைந்த முதல்வர் கருனாநிதி ஆட்சியில் தான் கிராமங்கள் தோறும் பாதுகாக்கப்பட்ட கான்கிரிட் சாலைகள், குடிநீர், மின்சார இணைப்புகள் வீடுகள் தோறும் வழங்கப்பட்டன. கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட விதை இன்று ஆலமரமாகி உள்ளது. இடைத்தேர்தலில் இடது சாரிகள் தனித்து போட்டியிடுவதன் மூலம் தவெக ஆட்சியை நூறு நாளில் விரும்பவில்லை என்பதை காட்டுகிறது.

கம்யூனிஸ்ட்

மாற்றம் வேண்டும் என்பதற்காகவும் நல்லாட்சி வேண்டும் என்பதற்காக அவர்கள் எதிர்பார்த்த மாற்றம் நடக்கவில்லை. முதலமைச்சர், அமைச்சரின் செயல்பாடுகள் பின்னோக்கி செல்வதால் அதற்கு முட்டு கொடுக்க கூடாது என்பதற்காகவும் ஆதரவை கொடுக்க கூடாது என்பதால் கம்யூனிஸ்ட் கட்சி விலகுகிறார்கள். ஒவ்வொரு கட்சியாக விலகுகின்றனர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+