மயில்சாமி.. நண்பனை பிரிய மனமின்றி.. இறுதி ஊர்வல வண்டியில்.. கல் மாதிரி இருந்த எம்எஸ் பாஸ்கர்.. ப்ச்!
மயில்சாமியின் மறைவுக்கு ஏராளமானோர் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்
சென்னை: பிரபல நடிகர் மயில்சாமியின் இறுதிச்சடங்கு வாகனத்தில் நடிகர் எம்எஸ் பாஸ்கர் சோகமாக அமர்ந்து இருந்த காட்சிகள் பலரையும் உலுக்கி உள்ளது.
பிரபல நடிகர் மயில்சாமி நேற்று மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் மயில்சாமி. நேற்று முதல்நாள் அவர் மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். இந்த கோவிலுக்கு அவர் அடிக்கடி செல்வார் என்று கூறப்படுகிறது. அங்கு நேற்று இரவு முழுக்க அவர் பூஜையில் கலந்து கொண்டார். இங்கே நடந்த கச்சேரியிலும் கலந்து கொண்டார்.
இரவு முழுக்க இங்கே தூங்காமல் அவர் வழிபாடு நடத்தி இருக்கிறார். நன்றாக சாப்பிட்டுவிட்டு இவர் கோவிலுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

வழிபாடு
வழிபாடு முடித்துவிட்டு, அதிகாலையில் மயில்சாமி சாலிகிராமத்திற்கு அருகே இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த ரோட்டில் இருக்கும் டீ கடை ஒன்றில் இவர் நின்று டீ குடித்துள்ளார். அங்கேதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு அப்போதுதான் லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டது போல நெஞ்சை பிடித்துக்கொண்டு படித்து உள்ளார். அங்கேயே நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்தவர் மயங்கி உள்ளார். சுந்தர் டீ கடையில் இருந்த சுந்தர் அதன்பின் அவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி அனுப்பி உள்ளார். அங்கிருந்துதான் அவரை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆனால் அவரது உயிர் மருத்துவமனைக்கு வரும்போதே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மயில்சாமி
மயில்சாமியின் மறைவுக்கு ஏராளமானோர் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சென்னை வடபழனி ஏவிஎம் மைதானத்தில் மயில்சாமி உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இதையடுத்து இன்று காலையும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சைதை துரைசாமி, நடிகர் பிரபு உள்ளிட்டோர் மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். சற்று முன் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. திரையுலகினர் பலர் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஏவிஎம் மயானம் வரை செல்லும் பாதையில் மக்கள் பலரும் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எம்எஸ் பாஸ்கர்
இன்று எம்எஸ் பாஸ்கர் மிகவும் சோகமாக காணப்பட்டார். எம்எஸ் பாஸ்கர் மயில்சாமி இருவரும் நெருங்கிய நண்பர்கள். சில படங்களில் இவர்கள் ஒன்றாக நடித்தும் உள்ளனர். சினிமா தாண்டி வெளியே இவர்கள் நெருக்கமான குடும்ப நண்பர்கள் போல வாழ்ந்து வந்தனர். இதனால் மயில்சாமி மறைவு காரணமாக எம்எஸ் பாஸ்கர் கடும் வருத்தத்தில் இருக்கிறார். இன்று காலையிலேயே மயில்சாமி வீட்டிற்கு மீண்டும் வந்த எம்எஸ் பாஸ்கர் அங்கேயே இறுதிச்சடங்கு பணிகளை கவனித்துக்கொண்டார்.

நண்பன்
பின்னர் இறுதிச்சடங்கு வண்டியில் அமர்ந்து சோகமாக சென்றார். மயில்சாமி தலைக்கு அருகே அமர்ந்து கொண்டு சோகமாக எம்எஸ் பாஸ்கர் தலையில் கைவைத்தபடி இருந்தார். அவர் சோகத்தின் உருவாக இருந்தது பலரையும் உடைய வைத்தது. மயில்சாமிக்கு ஏற்கனவே ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இதயத்தில் ஆபரேஷன் உட்பட பல்வேறு சிகிச்சை செய்யப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications