சத்யம் தியேட்டரில் கூலாக படம் பார்த்த "தல" தோனி.. எந்த படம் தெரியுமா! ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்
சென்னை: ஐபிஎல் தொடர்ந்து ஆரம்பித்து நடந்து வரும் நிலையில், சிஎஸ்கே வீரர்கள் கூலாக படம் பார்த்துவிட்டு வெளியே வரும் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. வழக்கம் போலவே சிஎஸ்கே அணிக்கு சப்போர்ட் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் மற்ற ஆண்டுகளை விட இந்தாண்டு சென்னை அணிக்கு ரொம்பவே முக்கியமானது.

ஏனென்றால் சிஎஸ்கே அணியை இத்தனை காலம் தோனி வழிநடத்தி வந்த நிலையில், இந்த முறை ருத்துராஜ் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதனால் அவரது கேப்டன்சி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
சிஎஸ்கே: தோனியின் இடத்தை ருத்துராஜ் நிரப்புவாரா என்பதே நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். இப்படி சிஎஸ்கே அணியைச் சுற்றி விவாதங்கள் நடந்து வரும் நிலையில், நேற்று சனிக்கிழமையன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், நீங்கள் சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருப்பார்கள் என்றே நினைப்போம். ஆனால், நேற்று சனிக்கிழமை அவர்கள் கூலாக சத்யம் சினிமாஸுக்குச் சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பியுள்ளனர். அப்போது அங்கே சூழ்ந்த ரசிகர்கள், அவர்கள் கிளம்பும் போது 'தோனி, தோனி' என விண்ணை முட்டும் அளவுக்குக் கரகோஷம் எழுப்பினர்.
தீயாக பரவும் வீடியோ: இது தொடர்பாக சுமார் ஒரு நிமிடம் ஓடும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் முதலில் தியேட்டரில் இருந்து நட்சத்திர பவுலர் தீபக் சாஹர் வெளியே வர அவருக்கு பின்னாலேயே தோனி வருகிறார். சிஎஸ்கே நட்சத்திரங்களைப் பார்க்க சத்யம் சினிமாஸில் அதிக அளவில் ரசிகர்கள் குவிந்தனர். படம் பார்த்துவிட்டு தோனி திரையரங்கில் இருந்து வெளியேறும் போது, அங்கே கூடியிருந்த சிஎஸ்கே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். தல தோனி என்று கோஷமிட்டனர்.
வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரசிகர்கள் யாரும் வீரர்கள் அருகே அனுமதிக்கப்படவில்லை. மேலும், பாதுகாப்பிற்கும் ஊழியர்கள் இருந்தனர். இதனால் அங்கே பல நூறு ரசிகர்கள் கூடியிருந்த போதும் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் எந்த பெரிய பிரச்சனையும் இல்லாமல் வெளியே வந்தனர்.
என்ன படம்: அவர்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் மஞ்சுமல் பாய்ஸ் படம் பார்த்ததாக கூறப்படுகிறது. இன்னும் சிலர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் வெளியாகி உள்ள யோதா படத்தை பார்த்ததாக சொல்கிறார்கள். என்ன படம் பார்த்தால் என்ன சிஎஸ்கே வீரர்களை பார்த்ததே போதும் என ரசிரக்ள் அந்த வீடியோவை கொண்டாடி வருகிறார்கள்.
ஐபிஎல் தொடர்: நடப்பு ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை சிஸ்கே தனது தொடக்க ஆட்டத்தில் சேப்பாக்கத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொண்டது. நடப்பு சாம்பியனான சென்னை இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து இரண்டிலும் ஆல்ரவுண்ட் திறனை வெளிப்படுத்தினர், இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றனர். .
முதலில் பேட் செய்த ஆர்சிபி அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும் முஸ்தபீர் ரஹ்மான் அவர்களைக் கட்டுப்படுத்தினார். 20 ஓவர்களில் ஆர்சிபி 174 ரன்கள் எடுத்தது. அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்தி கடைசிக்கட்டத்தில் காட்டிய அதிரடி ஓரளவுக்கு உதவியது. அதன் பிறகு பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்குத் தொடக்கம் முதலே நல்ல பேட்டிங் கிடைத்தது. 8 பால்கள் மீதம் இருக்கும் போதே சிஎஸ்கே வெற்றி பெற்றது.
இந்த முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த நிலையில், சிஎஸ்கே தனது அடுத்த போட்டியையும் இதே மைதானத்தில் தான் ஆடுகிறது. வரும் மார்ச் 26ஆம் தேதி சிஎஸ்கே அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
-
கடைசி 4 போட்டிகளில் 3ல் சேப்பாக்கம் மண்ணில் ஆடும் சிஎஸ்கே.. சென்னை அணியின் அட்டவணை.. முழு விவரம்! -
ஒரு போட்டிக்கு ரூ.20,000.. ஐபிஎல் சியர் லீடர்ஸ்க்கு எவ்வளவு சம்பளம்? 2 மாதங்களுக்கு பணமழை தான்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications