மத்திய பட்ஜெட்! ரூ 10 ஆயிரம் கோடியில் ஜவுளி பூங்கா! தமிழக சிறு, குறுந்தொழில்கள் சங்கம் வரவேற்பு!
சென்னை: 2026- 2027- ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் சிறு, குறுந்தொழில் துறை வளர்ச்சிக்கு முக்கியவத்துவம் அளித்திருந்தாலும் அந்த துறையின் நீண்ட கால கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (TANSTIA) தலைவர் வாசுதேவன் தெரிவித்துள்ளார். அதேவேளையில் ஜவுளித் துறைக்கு ரூ 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை வரவேற்கவும் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான மத்திய வரவு- செலவுத் திட்டத்தை தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (TANSTIA) வரவேற்கிறது. இந்த வரவு- செலவுத் திட்டம் தொழில்துறை வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியவத்துவம் அளிக்கும் அதே வேளையில் குறுந்தொழில் துறையினரின் நீண்ட கால கோரிக்கைகள் சிலவற்றைப் புறக்கணித்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.

வரவேற்கத்தக்க அறிவிப்புகள்
கட்டமைப்பு முதலீடு (Capex): 2026- 2027 ஆம் நிதியாண்டிற்கு ரூ 12.2 லட்சம் கோடி மூலதனச் செலவினமாக முன்மொழியப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். இது சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான ஆர்டர்களை அதிகரிக்க உதவும்.
தொழில்சார் பூங்காக்கள்: மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கும் அறிவிப்பு மற்றும் கண்டெய்னர் உற்பத்தியை ஊக்குவிக்க 5 ஆண்டுகளில் ரூ 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
நிதியுதவி: வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்காக ரூ 10,000 கோடி 'SME வளர்ச்சி நிதி' மற்றும் 'சுயசார்பு இந்தியா' (Self Reliant India) நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் ரூ 2000 கோடி குறுந்தொழில் முனைவோருக்குப் பெரிதும் உதவும்.
TReDS மற்றும் GeM ஒருங்கிணைப்பு: குறுந்தொழில்களிடமிருந்து மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் (CPSEs) மேற்கொள்ளும் அனைத்து கொள்முதல்களுக்கும் TReDS தளத்தின் மூலம் பணம் செலுத்துவதை கட்டாயமாக்கியிருப்பது, நிலுவைத் தொகை சிக்கலுக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும். மேலும் CGTMSE மூலம் இன்வாய்ஸ் டிஸ்கவுன்டிங்கிற்கு (Invoice Discounting) கடன் உத்தரவாதம் வழங்கப்படுவது பணப்புழக்கத்தை மேம்படுத்தும்.

கவலைகளும் ஏமாற்றங்களும்
வளர்ச்சி சார்ந்த அறிவிப்புகள் ஒரு புறம் இருந்தாலும், குறுந்தொழில்களின் அன்றாட இயக்கச் செலவுகளைக் குறைக்க வரவு- செலவுத் திட்டம் தவறிவிட்டது.
வருமான வரி குறைப்பு இல்லை: குறு மற்றும் சிறு தொழில்களுக்கான வருமான வரி விகிதங்களைக் குறைக்க எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. லாபத்தில் ஒரு பகுதியை நவீனமயமாக்கலுக்குப் பயன்படுத்த வரிக்குறைப்பு அவசியமாகும்.
நவீனமயமாக்கலுக்கான ஊக்கத்தொகை: சிறு மற்றும் குறுந்தொழில்கள் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தவும், விரிவாக்கம் செய்யவும் கூடுதல் தேய்மானச் சலுகை (Additional Depreciation) குறித்த அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. இது தொழில்துறை 4.0-க்கு (Industry- 4.0) மாறுவதை கடினமாக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications