முடவாட்டுக்கால் கிழங்கு சூப்.. மூட்டுவலிக்கு உதவும் ஆட்டுக்கால் சூப்புக்கு மாற்றான வரப்பிரசாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூட்டுவலி, முழங்கால் வலி, கை கால் வலி என்று அவதிப்படுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதுடன், உணவிலும் சில மாற்றங்களை செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு முடவாட்டுக்கால் கிழங்கு பற்றி தெரியுமா? மூட்டுப் பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளில் கவனம் பெற்றுள்ள இந்தக் கிழங்கின் சிறப்புகள் என்ன? இந்த கிழங்கில் சுவையான சூப் செய்வது எப்படி? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

முடவாட்டுக்கால் கிழங்கு, ஆட்டுக்கால் கிழங்கு, சைவ ஆட்டுக்கால் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் பாறைகளின் இடுக்குகளில் வளரும் இந்தத் தாவரம், பாரம்பரிய மருத்துவத்தில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

kilangu


முடவாட்டுக்கால் கிழங்கு என்றால் என்ன?

இதன் கிழங்கு பார்ப்பதற்கு இஞ்சி போலவே இருக்கும். வெளிப்புறத்தில் ஆட்டின் காலில் இருக்கும் முடி போன்ற நார்கள் காணப்படும். இந்த வித்தியாசமான தோற்றத்தால் இதற்கு முடவாட்டுக்கால் என்ற பெயர் வழங்கப்படுகிறது.

இந்த கிழங்கை மூட்டு வலி, எலும்பு வலி, நரம்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு பாரம்பரியமாக பயன்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக, கொல்லிமலைப் பகுதிகளில் மலையேறி நடப்பதால் ஏற்படும் கால் வலிக்கு இதை வேகவைத்து சூப்பாகக் குடிக்கும் பழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மூட்டுவலிக்கு உண்மையிலேயே உதவுமா?

முடவாட்டுக்கால் கிழங்கில் உள்ள தாவர வேதிப்பொருட்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான பாதிப்புகளில் இந்தத் தாவரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2022-ம் ஆண்டு மருத்துவ ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வு, இந்தக் கிழங்கு எலும்பு மூட்டு தேய்மானம் தொடர்பான பாதிப்புகளில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்தது. இதற்காக எலிகள் மீதும், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட செல்கள் மீதும் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த ஆய்வில், முடவாட்டுக்கால் கிழங்கின் நீர்ச்சாறு மூட்டுப் பகுதியில் ஏற்படும் அழற்சி மற்றும் குருத்தெலும்பு சிதைவுடன் தொடர்புடைய சில காரணிகளை கட்டுப்படுத்தும் தன்மையை காட்டியது. இதனால் எலும்பு மூட்டு தேய்மானம் தொடர்பான எதிர்கால மருத்துவ ஆய்வுகளில் இந்தத் தாவரத்துக்கு முக்கியத்துவம் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ நன்மைகள்

2025-ம் ஆண்டு வெளியான மற்றொரு ஆய்வுக் கட்டுரையும் இந்தக் கிழங்கில் உள்ள மருத்துவப் பண்புகள் குறித்து விரிவாக விளக்கியுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட தாவர வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மருத்துவப் பயன்பாடுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எலும்பு வலிமை, எலும்பு மூட்டு தேய்மானம் உள்ளிட்ட பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளும் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும், இவை பெரும்பாலும் ஆய்வக மற்றும் விலங்கு சோதனைகளின் அடிப்படையிலான முடிவுகள். மனிதர்களுக்கு இதே பலன்கள் கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்த இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

சூப் செய்வது எப்படி?

இந்த கிழங்கை வைத்து சைவ ஆட்டுக்கால் சூப் தயாரிக்கலாம். முதலில் கிழங்கின் வெளிப்புறத்தில் இருக்கும் நார்களை நன்றாக சுத்தம் செய்து அகற்ற வேண்டும். பிறகு தோலை சீவி, உள்ளே இருக்கும் கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி போன்றவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளிக்க வேண்டும். அதில் அரைத்து வைத்துள்ள விழுதையும், நறுக்கிய கிழங்கையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள், பெருங்காயம், தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட வேண்டும்.

கிழங்கு நன்றாக வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் சூடான முடவாட்டுக்கால் சூப் தயார்.

சிலர் இந்தக் கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்தும் சூப்பில் சேர்ப்பார்கள். இந்தக் கிழங்கைப் பார்க்கும்போது ஆட்டுக்கால் போல தோற்றமளிப்பது மட்டுமல்லாமல், சமைக்கும்போதும் ஆட்டுக்கால் சூப் போன்ற மணமும் சுவையும் கிடைக்கும்.

மலைப்பகுதிகளில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் முடவாட்டுக்கால் கிழங்கு, இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, இதை வைத்து தயாரிக்கப்படும் சூப் சுவையுடன் இருப்பதோடு, இதன் மருத்துவப் பண்புகள் குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், முதன்முறையாக சாப்பிடுபவர்கள், சரியான கிழங்கைத் தேர்வு செய்து, உணவுக்குப் பயன்படுத்தும் முறையைத் தெரிந்துகொண்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

மூட்டுவலி போன்ற பிரச்சினைகளுக்கு இந்த கிழங்கு மட்டுமே, மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகாது. அதே நேரத்தில், பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த கிழங்கின் மருத்துவ பண்புகள் குறித்து வெளியாகும் ஆய்வுகள் தொடர்ந்து ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+