Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குறிக்கப்பட்ட நாள்.. சென்னையில் திறக்கப்படும் மிகப்பெரிய ஆம்னி பேருந்து நிலையம்.. எங்கே தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான தனி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் அடுத்த மாதம் 3ம் வாரம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முடிச்சூரில் ஆம்னி பேரூந்துகளுக்கான தனி பேருந்து நிலையம் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்த நிலையில் கடைசி கட்ட சீரமைப்புகள் நடக்கின்றன.

keelampaakkam bus diwali deepavali

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதே சமயம் ஒரு சில பேருந்துகள், மாநகர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயங்குகின்றன. ஈசிஆர் நோக்கி செல்லும் பேருந்துகள், பெங்களூர் செல்லும் பேருந்துகள் தொடர்ந்து கோயம்பேட்டில் இருந்து இயங்கும். இந்த வருட கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக கோயம்பேடு பேருந்து நிலைய பயன்பாடு நிறுத்தப்படும்.

இங்கே பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன. அங்கே விளையாட்டு அரங்கம், ஹை ரைஸ் கட்டிடம் ஒன்றும் வர உள்ளது.

ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காலியாகிவிட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது.

ஐடி நிறுவனம்; இந்த நிலையில்தான் இங்கே பிரம்மாண்ட ஐடி நிறுவனம் அமைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் 2 மாதங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் . அங்கே நில ஆய்வு தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கிளாம்பாக்கம்: கடந்த 30.12.2023 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை பொது மக்களின் வசதிக்கேற்ப, 30.01.2024 முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 90 சதவிகித அரசுப் பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 10 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பேருந்து நிலைய தூய்மை: தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்கும்.

இந்த நடவடிக்கை பயணிகளுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாட்டிலேயே சிறந்த பேருந்து நிலையமாக இது இருக்க வேண்டும் , உலக தரத்திற்கு இணையாக வளாகத்தை பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்படி தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகள் + 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.

விமான நிலைய மாதிரியை போல இந்த பேருந்து நிலையத்தை இயக்க உள்ளனர். விமான நிலையம் இப்படி தனியாரிடம் விடப்படுகிறது. அதை தனியார் அமைப்புகள் சரியாக இயக்கியும் வருகின்றன. முக்கியமாக சுத்தமாக பயன்படுத்துவது தொடங்கி பல்வேறு அடிப்படை பணிகளை தனியார்கள் சிறப்பாக செய்கின்றன. 24 மணி நேரமும் பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தனியாரிடம் ஒப்படைக்கும் போதே இது சாத்தியம் ஆகும். இதற்காக சில தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்பந்தங்கள் கொடுக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள . 105 கடைகள், பார்க்கிங், நுழைவு கட்டணம் மற்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி, இந்த டெர்மினஸ் நாட்டிலேயே சிறந்ததாகப் பராமரிக்கப்படும் என்று கூறப்படுகிறது

ஆம்னி பேருந்துகள்: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான தனி பேருந்து நிலையம் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில்தான் ஆம்னி பேருந்துகளுக்கு கிளாம்பாக்கம் அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகின. அதற்கான பணிகள் தற்போது முடிந்துள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, முடிச்சூரில் 28 கோடி ரூபாய் செலவில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு உள்ளதாக CMDA தெரிவித்துள்ளது.

அதுவும் அடுத்த மாதமே, இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, ​​கிளாம்பாக்கத்தில் 144 பார்க்கிங் இடங்களும், பேருந்துகள் இயக்க 100 பேருந்துகள் வசதி கொண்ட கொண்ட பேக்களும் உள்ளன, மேலும் ஆம்னி பேருந்துகளுக்கான பார்க்கிங் பிரச்சினையை அரசு நிவர்த்தி செய்து வருகிறது. இதை கருத்தில் கொணடே.. கிளாம்பாக்கத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் முடிச்சூர் அருகே புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைத்து உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+