அமெரிக்க வரலாற்றில் முதல்முறை.. குழந்தைகளுக்கு அதிகம் வைக்கப்பட்ட பெயர்களில்.. "முகமது" டாப் இடம்!
சென்னை: அமெரிக்காவில் அதிகம் வைக்கப்பட்ட மிகவும் பிரபலமான குழந்தை பெயர்களில் முகமது என்ற பெயர் டாப் 10க்குள் வந்துள்ளது. 2024ம் ஆண்டில் இந்த பெயர் அதிக அளவில் வைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் வெளியான தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டு நியூயார்க்கில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான பெயர்களில் முகமது என்ற பெயர் 9 வது இடத்தைப் பிடித்தது. உலகில் அதிக அளவில் வைக்கப்படும் பெயர்களில் முகமது என்ற பெயர்தான் இப்போதும் முதலிடத்தில் உள்ளது. இப்போது நியூயார்க்கில் இது 9 வது இடத்தைப் பிடித்து உள்ளது.

கடந்த ஆண்டு 10 இடத்திற்குள் வராத முகமது என்ற பெயர் நியூயார்க்கில் இந்த முறை 9வது இடத்தை பிடித்து உள்ளது. நியூயார்க்கில் மக்கள் தொகை மாற்றம், கலாச்சார மாற்றத்தை உணர்த்தும் விதமாக இந்த புள்ளி விவரம் அமைந்துள்ளது.
பிரபல பெயர்:
முகமது அல்லது முஹம்மது என்பது உலகின் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்றாகும், சுமார் 150 மில்லியன் மக்கள் இந்த பெயரைக் கொண்டுள்ளனர்.
1924 முதல் 1994 வரை ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் அதிகம் வைக்கப்பட்ட பெயர்களில் இது முதலிடம் பிடித்தது. 1996 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆண் குழந்தைகளுக்கான 100 பிரபலமான பெயர்களில் இந்தப் பெயர் இடம்பெற்றுள்ளது. இப்போது உலகில் அதிக அளவில் வைக்கப்படும் பெயர்களில் முகமது என்ற பெயர்தான் முதலிடத்தில் உள்ளது.
அதேசமயம் இடத்திற்கு இடம் இதன் எழுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, 2023 ஆம் ஆண்டில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அதிக குழந்தைகளுக்கு மொகமது என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. முகமது, முஹம்மது , மொகமத் உள்ளிட்ட மாறுபட்ட பெயர்கள் வைக்கப்பட்டு உள்ளது. Muhammed, Muhamad, Mohammad, Mohammed, Mahammad, Maxammed, Mehemmed, Mohamad, Mohamed என்ற விதங்களில் இந்த பெயர்கள் வைக்கப்படுகின்றன. 2024ம் ஆண்டில் இந்த பெயர் அதிக அளவில் வைக்கப்பட்டு உள்ளது. முஹம்மது என்பது அரபு வம்சாவளியைச் சேர்ந்த பெயர் ஆகும்.
முகமது என்று பெயரிடப்பட்ட சுமார் 60% மக்கள் மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானில் வாழ்கின்றனர். இத்தனை காலம் மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானில் அதிக முகமது பெயர் இருந்த நிலையில் அமெரிக்காவிலும் இந்த முறை அதிகரித்துள்ளது.
இதன் மூலம் முதல்முறையாக அமெரிக்காவில் அதிகம் வைக்கப்பட்ட மிகவும் பிரபலமான குழந்தை பெயர்களில் முகமது என்ற பெயர் டாப் 10க்குள் வந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் 5 இடங்களுக்குள் இந்த பெயர் வரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த பெயர் சில இடங்களில் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆம் இந்த பெயரை வைத்தால் சில நாடுகளில் அரசுகள் அந்த பெயரை பதிவு செய்ய அனுமதிக்காது. 2017 ஆம் ஆண்டு முதல் சீனாவின் சின்ஜியாங் பகுதியில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த பெயர் வைக்க தடை உள்ளது. பாகிஸ்தானில் உள்ள அஹ்மதி சமூகத்தினருக்கும் இந்தப் பெயர் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினிலும் உலகில் அதிக அளவில் வைக்கப்படும் பெயர்களில் முகமது என்ற பெயர்தான் இப்போதும் முதலிடத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications