Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த மாதிரி கல்யாண பத்திரிகையை எல்லாம் நாம இப்படி வீடியோவில் பார்த்துக்கிட்டாதான் உண்டு!!

முகேஷ் அம்பானியின் மகன் திருமண அ ழைப்பிதழ் வைரலாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அம்பானி வீடு கல்யாணபத்திரிகை Invitation of Mukesh Ambani's son Akash Ambani & Shloka Mehtas Wedding

    சென்னை: பொறந்தா அம்பானி வீட்டில பொறக்கணும்.. என்று எல்லோரையுமே மூக்கின் மீதும் விரல் வைத்து முணுமுணுக்க வைத்து வருகிறது அந்த "அடேங்கப்பா கல்யாண பத்திரிகை".

    எப்பவுமே நம் நாட்டில் பணக்காரர்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருந்து எல்லாரையும் ஏங்க வைத்து வந்து கொண்டிருப்பவர் அம்பானிதான். பணம் இருக்கிறதாலோ என்னவோ வீட்டு விசேஷங்கள் எல்லாம் ராஜ வாழ்க்கை கண்ணில் தெரிகிறது.

    அதிலும் அம்பானி வீட்டில் இது கொஞ்சம் ஜாஸ்திதான். இவர் வீட்டு கல்யாணம் என்றாலே நாட்டு மக்களுக்கு ஒரு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ஏனென்றால் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த கல்யாணம் இந்த வீட்டு கல்யாணம்தான்.

     கல்யாண பொண்ணு

    கல்யாண பொண்ணு

    அம்பானியின் மகன் அதாவது இஷாவின் சகோதரர் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மார்ச் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போது இன்விடேஷனும் ரெடியாகி விட்டது. கல்யாண பொண்ணு வைர வியாபாரி மகளாம். அப்பறம் கேட்கணுமா என்ன... கல்யாண பத்திரிகை இணையத்தில் வைரலாகி ஜொலி ஜொலித்து வருகிறது.

    தாமரைகள், மயில்கள்

    அந்த வீடியோவில், ரோஸ் கலர் பெட்டியில் அழைப்பிதழ் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெட்டியின் அடிப்பகுதி முல்லை மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில், சூரிய ஒளியில் தாமரைகள் ஆங்காங்கே மலர்ந்திருக்கிறது... மயில்கள் நடனமாடுகிறது.. பறவைகள் பறக்கின்றன... பசுக்களுக்கு நடுவே ராதையும் கிருஷ்ணரும் அருகருகே நின்று கொண்டிருக்கிறார்கள்.

     வெள்ளி ஃப்ரேம்

    வெள்ளி ஃப்ரேம்

    இப்போது இதைத் திறந்தவுடன், மேல் பகுதியில் ராதா கிருஷ்ணா படம் இருக்கிறது. வெறுமனே இல்லை.. சுற்றிலும் வெள்ளி ஃப்ரேமில் உள்ளது. இனிமேதான் கல்யாண பத்திரிகையே வரப்போகுது. ஆரஞ்சு நிறத்தில் அந்த அழைப்பிதழ் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதைத் திறந்தவுடன் நிகழ்ச்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு அழைப்பு என பக்கங்கள் விரிந்து கொண்டே செல்கிறது.

    விநாயகர்

    விநாயகர்

    அதில் ஒரு பக்கத்தை திருப்பினால், வெண்ணிற விநாயகர் ரதத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். கடைசியாக முகேஷ் அம்பானி- நீதா தம்பதியின் அழைப்பு இருக்கிறது. ஒரு கல்யாண பத்திரிகை மட்டும் எப்படியோ ரூ.1.5 லட்சத்திற்கு மேல இருக்குமாம். நாட்டிலுள்ள அனைத்து பிரபலங்கள், தலைவர்கள், முக்கிய தலைகளுக்கு இந்த பத்திரிகையை அம்பானி வைத்து கல்யாணத்துக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

    நமக்கு வீடியோதான்

    கல்யாண பத்திரிக்கையே இத்தனை பிரம்மாண்டம் என்றால், கல்யாணம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் அல்லாமல் உலக மக்களுக்கே ஏற்பட்டுள்ளது. அம்பானி வீட்டு கல்யாணம் என்றால் சும்மாவா என்ன? இந்த மாதிரி கல்யாண பத்திரிகையை எல்லாம் நாம இப்படி வீடியோவில் பார்த்துக்கிட்டாதான் உண்டு!!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+