கருணாஸ் நிலைமையை பார்த்தீங்களா.. எந்த கட்சியும் சேர்க்கவில்லை.. "ஆளை விடுங்க.." தடாலடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த சட்டசபை தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி போட்டியிடவில்லை என்று அதன் தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.

234 தொகுதிகளில் அதிமுக தோல்விக்கு, தனது கட்சியினர் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது திருவாடானை தொகுதி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் கருணாஸ்.

முக்குலத்தோர் புலிப்படை

முக்குலத்தோர் புலிப்படை

முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை நடத்தி வருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட போது, அங்கு கருணாசும் இருந்தார். இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார்.

திடீர் மாற்றங்கள்

திடீர் மாற்றங்கள்

இதன்பிறகு திமுகவுடன் நட்பு பாராட்டினார் கருணாஸ். சட்டசபையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனங்களை முன்வைத்தார். பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை எடப்பாடி பழனிச்சாமியுடன் நட்பு பாராட்டினார்.

திமுகவிலும் சேர்க்கவில்லை

திமுகவிலும் சேர்க்கவில்லை

அதேநேரம் 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் கருணாஸ் கட்சி சேர்த்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாக கடும் அதிருப்தி அடைந்த கருணாஸ் அதிமுக தலைமை மீது கடும் விமர்சனங்களை முன் வைத்துவிட்டு திமுக பக்கம் கூட்டணிக்காக சென்றார். ஆனால் திமுகவில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கூட்டணிக்கு கூப்பிடவில்லை

கூட்டணிக்கு கூப்பிடவில்லை

எந்த பக்கம் செல்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் கருணாஸ். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு செல்வாக்கு கிடையாது. செலவிடுவதற்கு கட்சியினரிடம் வசதி கிடையாது. முக்குலத்தோர் புலிப்படை கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கு வேறு கட்சிகளும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தேர்தலில் தனது கட்சி போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

கருணாஸ் தொகுதி

கருணாஸ் தொகுதி

அதேநேரம் 234 தொகுதிகளிலும், அதிமுகவை தோற்கடிக்க தனது தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் கடந்த இரண்டு வருடமாக தொகுதி பக்கம் செல்லவில்லை. தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிக்கொண்டு தொகுதியை அவர் மறந்துவிட்டார். எனவே மறுபடி போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு கிடைக்காது என்பதுதான் கள நிலவரம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+