"முல்லைப்பெரியாறு பற்றி பீதியை கிளப்பாதீர்கள்"..பினராயி பதிலடி.. ப்ரித்விராஜை வறுக்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது, இந்த அணை பற்றி இணையத்தில் தவறான வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை மீண்டும் விவாத பொருளாக மாறியுள்ளது. கேரளாவில் தீவிரமாக மழை பெய்து வரும் நிலையில் முல்லைப்பெரியாறு அணை நிரம்பி வருகிறது. இந்த நிலையில்தான் முல்லைப்பெரியாரில் இருந்து அதிகபட்ச தண்ணீரை கால்வாய் வழியாக உடனடியாக வைகை அணைக்கு திறந்து விட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கடிதம் காரணமாக பீதி அடைந்த கேரள மக்கள் பலர் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து என்று நினைத்துக்கொண்டு உடனே அணையை கைவிட்டுவிட்டு.. புதிய அணை கட்டும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர் மட்டம்
முல்லைப்பெரியாறு அணையில் கோர்ட் உத்தரவின்படி 142 அடி வரை தண்ணீர் சேகரிக்க முடியும்.
தற்போது அணைக்கு நிகர நீர்வரத்து வினாடிக்கு 2,109 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 138 அடியாக உள்ளது. இந்த அணைக்கு ஆபத்து உள்ளதாக அஞ்சும் கேரள மக்கள், உடனடியாக முல்லைப்பெரியாறு அணையை கைவிட வேண்டும். புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அணை 142 அடி கொள்ளளவை எட்டினால் ஆபத்து ஏற்படும் என்று கேரள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நடிகர்கள்
மலையாள நடிகர்கள் சிலரும் இந்த அணைக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் ப்ரித்விராஜ் செய்த சமீபத்திய போஸ்டில், உண்மை எதுவாக இருந்தாலும், ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும்.. 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அணையை தொடர்ந்து பயன்படுத்துவது சரியாக இருக்காது. இப்போது நாம் அரசியல், பொருளாதாரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு எது சரியானதோ அதை செய்ய வேண்டும். நாம் இந்த சிஸ்டத்தை மட்டுமே நம்ப முடியும். சிஸ்டம் சரியான முடிவு எடுக்கும் என்று நம்புவோம் என்று ப்ரித்விராஜ் குறிப்பிட்டுள்ளார். அவரை தொடர்ந்து இன்னும் பல மலையாள நடிகர்கள் இதே கோரிக்கையை வைத்துள்ளனர்.

எச்சரிக்கை
இந்த கோரிக்கைகளை தொடர்ந்து கேரள மக்கள் இடையே இந்த அணை குறித்து ஒரு வித பீதி ஏற்பட்டது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இது தொடர்பாக கேரள மக்களுக்கும், வதந்திகளை பரப்புவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், சிலர் சமூக வலைத்தளங்களில் முல்லைப்பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். தேவையற்ற பீதியை கிளப்பி வருகிறார்கள்.
Recommended Video

விளக்கம்
இன்னும் சிலர் இந்த அணை மோசமான நிலையில் இருக்கிறது. மக்கள் பலர் சாக போகிறார்கள். பல லட்சம் பேருக்கு ஆபத்து என்று இணையத்தில் தேவை இல்லாத "சீன்" உருவாக்கி வருகிறார்கள். ஆனால் உண்மையில் இப்போதைக்கு முல்லைப்பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும், ஆபத்தும் இல்லை. இணையத்தில் தவறான வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடவடிக்கை
இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணை குறித்து விமர்சனம் வைத்த ப்ரித்விராஜுக்கு இணையத்தில் தமிழர்கள் பலரும் கடுமையாக பதில் அளித்துள்ளனர். உங்கள் மாநில முதல்வரே வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறி உள்ளார். உங்கள் மாநில முதல்வரே அணை பாதுகாப்பாக இருப்பதாக கூறி உள்ளார். அப்படி இருக்கும் போது நீங்கள் மட்டும் ஏன் விஷம பிரச்சாரம் செய்து வருகிறீர்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications