இந்திய தேசிய லீக் தலைவருக்கு கொலைமிரட்டல்... பின்னணியில் ரூ.3 கோடி கடன்...?
விருதுநகர்: இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பஷீர் அகமதுவுக்கு தொழிலதிபர் ஒருவர் கொலைமிரட்டல் விடுத்ததாக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை மண்ணடியில் உள்ள ராமசாமி தெருவில் கிரீன் பேலஸ் என்ற விடுதியை நடத்தி வருபவர் பஷீர் அகமது. இவர் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பஷீர் அகமது தனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரசோழன் கிராமத்துக்கு சென்றிருந்த போது அங்கு அவரை சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
சென்னை கோனிமேடு பகுதியை சேர்ந்த கலிலுர் ரஹ்மான் என்பவரிடம் பஷீர் அகமது ரூ.3 கோடி கடன் பெற்றிருந்ததாகவும் அதில் ஒன்றரை கோடி ரூபாய் மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளதாகவும், மீதி ஒன்றரைக் கோடியை தராமல் பஷீர் அகமது தாமதித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே வீரசோழன் கிராமத்தில் வைத்து மிரட்டப்பட்டதால் உள்ளூர் காவல் நிலையத்தில் பஷீர் அகமது புகார் அளித்தார். இதையடுத்து தொழிலதிபர் கலிலுர் ரஹ்மான் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
ஒரே சமூகத்தை சேர்ந்த இரண்டு முக்கியப் பிரமுகர்களுக்குள் எழுந்துள்ள இந்தப் பிரச்சனை சில இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கும் சென்றுள்ளது. இதனிடையே பஷீர் அகமது அளித்துள்ள புகார் மீதான உண்மை தன்மை பற்றியும் போலீஸ் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications