வேலும் மயிலும் முருகனாய் காட்சி தரும் எம்ஜிஆர் ஜெயலலிதா பாடிய முருகன் பாடல் - வைரல்
வேலும் மயிலுமாய் காட்சி தரும் முருகனும், ஜெயலலிதா பாடிய முருகன் பாடலும் இணைய தளங்களில் செம வைரலாகி வருகிறது.
சென்னை: கந்த சஷ்டி கவசத்தை பழித்து பேசுகிறேன் என்று பேசி ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள் கருப்பர் கூட்டத்தினர். முருகனின் பெருமை உலகம் முழுவதும் பரவி வருகிறது. தமிழ் கடவுள் முருகனாக வேடம் போட்ட மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும், முருகனைப் போற்றி ஜெயலலிதா பாடிய பாடலும் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் நடித்த படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். பக்திப்பாடலும் பாடியிருக்கிறார்.
மறைந்த வயலின் வித்வானும், இசையமைப்பாளருமான குன்னக்குடி வைத்தியநாதன் இசையில். ''தங்க மயில் ஏறி வரும் எங்கள் வடிவேலவன்...'' என்ற பாடலை ஜெயலலிதா பாடியுள்ளார்,
இந்தப்பாடல்தான் இப்போது வைரலாகி வருகிறது. கந்த சஷ்டி கவசத்திற்கு எதிராக பேசியவர்கள் இப்போது சிறையில் இருக்கும் நிலையில் முருக பக்தர்கள் மட்டுமல்லாது தமிழ் கடவுளை போற்றுபவர்களும் கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கிளம்பியுள்ளனர்.

முருகனாக எம்ஜிஆர்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சாண்டோ சின்னப்பத்தேவர் படத்தில் முருகனாக நடித்திருப்பார். கையில் வேலும் கூடவே மயிலும் இருக்க முருகனாகவே மாறியிருப்பார். இந்த படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஜெயலலிதாவும் முருகனும்
ஸ்ரீதேவி குழந்தை முருகனாக நடிக்க அதன் அருகில் ஜெயலலிதா அமர்ந்திருக்கும் அழகு படம் பலரது வீடுகளில் அலங்கரிக்கிறது.
கந்தன் கருணை படத்தில் முருகனின் இணையாக வள்ளியாக நடித்திருப்பார் ஜெயலலிதா. இப்போது கந்த சஷ்டி கவசம் பாடல் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில் ஜெயலலிதாவின் படமும் அவர் பாடிய பாடலும் செம வைரலாகி வருகிறது.

ஜெயலலிதா பாடிய முருகன் பாடல்
தங்க மயில் ஏறி வரும் எங்க வடிவேலவன் என்ற பாடலில் முருகனின் பெருமைகளையும் பல சிறப்புக்களையும் போற்றி பாடியுள்ளார் ஜெயலலிதா. இந்தப்பாடலை இப்போது எல்லோரும் வைரலாக்கி வருகிறார்கள்.

முருகனுக்கு அரோகரோ
வெற்றிவேல் வீரவேல் என்ற வீர முழக்கம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. அஜீத் நடித்த பில்லா 2 திரைப்படத்தில், சேவல் கொடி பறக்குதடா என்ற பாடலும் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலானது. முருகனுக்கு எதிராக பேசினால் தமிழர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று சொல்லி வருகிறார்கள் முருக பக்தர்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications