ஆர்எஸ்எஸ் டவுசர் அணியமாட்டார் முருகன்! மதுக்கூர் ராமலிங்கத்தின் பேச்சால் ஆடிப்போன பாஜக.. இது எப்போ?
சென்னை: மதுரைக்கு எத்தனையோ முறை வந்த பிரதமர் மோடி, இதுவரை கீழடிக்கோ அல்லது திருப்பரங்குன்றத்திற்கோ சென்றதில்லை, ஆனால் இப்போது தேர்தல் நெருங்கும் வேளையில் குன்றத்தைத் தேடிச் செல்கிறார் என்று மதுக்கூர் ராமலிங்கம் நிகழ்ச்சி ஒன்றில் விமர்சித்துள்ளார்.. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ளது.. பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றையொன்று சாடி விமர்சித்து வருகின்றன.. அந்தவகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தொடர்ந்து பாஜக, விஜய் இரு தரப்பையுமே தொடர்ந்து சாடி வருகிறார்..

சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் பேசிய மதுக்கூர் ராமலிங்கம், "தவெக அரசியல் கட்சி போல தெரியவில்லை, இளைஞர்கள் ஏமாறக்கூடாது.. விஜய் பிரச்சார வாகனம் செல்லும் இடங்களில் பட்டாசு, விசில் போன்ற ஆரவாரங்கள் தேவையற்றவை..
தில் இருக்கா
அந்த வாகனம் சென்ற இடங்களில் மதுரை, திண்டிவனம், கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பலர் உயிரிழந்துள்ளனர்.. அந்த வாகனத்தைப் பார்த்தால் எமன் ஏறும் எருமை மாடு போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. அது வந்ததால் குறைந்தது ஒருவரையாவது க்ளோஸ் செய்யாமல் போவதில்லை.
சேலத்தில் பேசிய விஜய் "ஒரு சதவீதம் வாக்குகள் வாங்கும் தில் உங்களுக்கு இருக்கா?" என்று கேட்கிறார்.. அதுவே கட்சி வளர்ச்சி குறித்த சந்தேகத்தை காட்டுகிறது என்றெல்லாம் சாடியிருந்தார்..
மதுக்கூர் ராமலிங்கம்
இந்நிலையில், சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் மதுக்கூர் ராமலிங்கம் கலந்துகொண்டு அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார்.. தமிழக அரசியலின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகளை ஒப்பிட்டு அவர் பேசிய கருத்துக்கள் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
குறிப்பாக, அமெரிக்காவின் தலையீடும் இந்திய பிரதமரின் நிலைப்பாடும் எப்படி சாதாரண மக்களின் எரிபொருள் விலையைத் தீர்மானிக்கிறது என்பதை அவர் விரிவாக விளக்கினார்..
"குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என்று சொல்வார்கள், ஆனால் இன்று எண்ணெய் வளம் இருக்கும் நாடுகளுக்கெல்லாம் அமெரிக்கா புகுந்துவிடுகிறது.. ஈரான் நாடு இந்தியாவிற்கு மலிவான விலையில் கச்சா எண்ணெய் வழங்கி வந்த ஒரு உற்ற நண்பன்... அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் அந்தத் தாக்குதலுக்கு மறைமுக அங்கீகாரம் அளிப்பது போல் அமைந்துள்ளது,
அடகு வைத்த இந்தியா
இந்தியா யாரிடம் பெட்ரோல் வாங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை அமெரிக்காவிடம் இந்தியா அடகு வைத்துவிட்டது..
மதுரைக்கு எத்தனையோ முறை வந்த பிரதமர் மோடி, இதுவரை கீழடிக்கோ அல்லது திருப்பரங்குன்றத்திற்கோ சென்றதில்லை, ஆனால் இப்போது தேர்தல் நெருங்கும் வேளையில் குன்றத்தைத் தேடிச் செல்கிறார்,
ராமர் மற்றும் ஐயப்பன் பெயரால் அரசியல் செய்து பார்த்தவர்கள், இப்போது முருகனைத் தங்கள் பக்கம் இழுக்க பார்க்கிறார்கள்,.. முருகன் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் காக்கி அரை டவுசரை அணிய மாட்டார், அவர் ஆண்டியாகக் கோவணத்தோடு தான் நிற்பாரே தவிர இவர்களது சித்தாந்தத்திற்குள் சிக்கமாட்டார்..
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி தனது தனித்தன்மையை இழக்க மாட்டோம் என்று கூறினாலும், மதுரை பொதுக்கூட்டத்தில் பாஜகவின் கட்டளைக்கு இணங்கி பெரியார் படத்தை அகற்றியது அவர்களின் அடிமைத்தனத்தைக் காட்டுகிறது.. தங்கள் கட்சித் தலைவர்களின் படத்தைக் கூட மேடையில் வைக்க முடியாத நிலையில் தான் அதிமுக கூட்டணி உள்ளது , தமிழகத்தில் கரையேற முடியாத பாஜக எனும் கரடியிடம் எக்குதப்பாக அதிமுக மாட்டிக்கொண்டது.,
பாஜகவைச் சித்தாந்த எதிரி என்று கூறிவிட்டு அவர்களைப் பற்றிப் பேசவே விஜய் தயங்குகிறார், தனது சொந்தக் கட்சிக்கே கால்ஷீட் கொடுப்பவராக இருக்கும் விஜய், சாதாரண நேரங்களிலேயே மக்களைச் சந்திக்காதவர் முதலமைச்சரான பிறகு கிராமம் கிராமமாகச் செல்வேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது..
ஒரு தலைவர் என்றால் களத்திற்கு வர வேண்டும், ஆனால் இவர் கூட்டம் நடத்தினாலே அங்கே உயிரிழப்புகள் ஏற்படுவது உறுதி என்றாகிவிட்டது, தமிழக சட்டமன்றத் தேர்தல் என்பது இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் ஒரு முக்கிய களம், பாஜகவின் வஞ்சக வலையில் விழுந்துள்ள அதிமுக கூட்டணியை மக்கள் முற்றிலுமாக வீழ்த்த வேண்டும்" என்றெல்லாம் பேசினார் மதுக்கூர் ராமலிங்கம்..
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
குன்னம், பல்லாவரம் தொகுதிகளில் வேட்பாளர்கள் யார்! அறிவித்தார் பாரிவேந்தர் -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications