“சுப்ரீம் சாதி”.. பிராமணர்கள் யார் வாய்ப்பையும் பறிக்கல! பாஸ்கி பேச்சுக்கு ஜேம்ஸ் வசந்தன் சப்போர்ட்
உலகிலேயே உயர்ந்த சாதியினர் பிராமணர்கள்தான் என்று நடிகர் பாஸ்கி பேசியதில் தனக்கு மாற்றுக்கருத்து இல்லை என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்து உள்ளார்.
சென்னை: உலகிலேயே உயர்ந்த சாதியினர் பிராமணர்கள்தான் என்றும், படைப்பாற்றலிலும், அறிவிலும் அவர்களே சிறந்தவர்கள் எனவும் நடிகர் பாஸ்கி பேசியதில் தனக்கு மாற்றுக்கருத்து இல்லை என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்து உள்ளார். அனைத்து துறைகளிலும் பிராமணர்களே சிறந்து விளங்குவதாவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
நடிகரும், சினிமா, கிரிக்கெட் விமர்சகருமான பாஸ்கி கோவையில் நடைபெற்ற பிராமணர் சங்க கருத்தரங்கத்தில் பிராமணர்கள் குறித்து உரையாற்றிய கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
உலகத்தில் படைப்பாற்றலுக்கு பெயர்போனது பிராமண சமுதாயம் என்று கூறிய அவர், பிராமண சமுதாயம்தான் உலகத்திலேயே உயர்ந்த நிலையில் இருக்கும் சமுதாயம் என்பதில் தனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

ஜேம்ஸ் வசந்தன் கருத்து
இந்த நிலையில் பாஸ்கியின் இக்கருத்துக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், "நகைச்சுவையாளர் பாஸ்கி பேசிய ஒரு காணொலிப் பகுதியை ஒருவர் அனுப்பியிருந்தார். பார்த்தேன், சிரித்தேன், அவர் நகைச்சுவை உணர்வை எப்போதும் போலவே ரசித்தேன்!

மாற்றுக் கருத்து இல்லை
அது எந்த விதத்திலும் என்னைப் பாதிக்கவில்லை. மாறாக, ஒரு உண்மையை நினைவூட்டியது என்றே சொல்லலாம். "Creativity-யில் பிராமணர்தான் supreme community" என்கிறார். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. செவ்விசை வாய்ப்பாட்டு, வாத்திய இசை, திரைப்பட இசையமைப்பு, வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடகியர், இயக்குநர், நடிகர், நடிகையர், விளையாட்டுத் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, அறிவியல், பொருளாதாரம், நீதித்துறை என எல்லாவற்றிலும் தலைசிறந்து விளங்குபவர் பெரும்பாலும் பிராமணரே.

கோபம் வரவில்லை
இது எல்லோர்க்கும் தெரிந்ததுதானே? அதை அவர் சொல்லும்போது எந்த அடிப்படையில் மறுக்கமுடியும்? ஏன் மறுக்கவேண்டும்? அது எனக்குக் கோபத்தையோ, வெறுப்பையோ வரவழைத்தால் அது என் கையாலாகாத்தனம். அவர்களோடு போட்டியிட நான் என்னைத் தயார் செய்து கொள்வேன், அல்லது ஒதுங்கிவிடுவேன். அவர்களிடமிருந்து நான் பல நல்ல அம்சங்களைக் கற்றுக்கொள்கிறேன்.

பிராமணர்களுக்கு இருக்கும் பலம்
இதைத்தாண்டி, அவர்கள் மற்றவர் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கின்றனர் என்ற ஒரு குற்றச்சாட்டு காலங்காலமாகவே உண்டு. அதில் எனக்கு முழுவதும் உடன்பாடில்லை. அவர்களுக்கென சில பலங்கள் உண்டு. தங்கள் கருத்துகளைத் தெளிவான விதத்தில் எடுத்துரைக்கும் வல்லமையும், கடுமையான கருத்துகளையும் நயமாக எடுத்து வைப்பதும், பிடிக்காதவரைக் கூட புன்முறுவலோடு எதிர்கொள்வதும், ஒரு கூட்டத்தில் தங்கள் சாமர்த்தியத்தால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும், அவமானங்களைத் துடைத்தெறிந்து விட்டு இலக்கில் குறியாக இருப்பதும் சில எடுத்துக்காட்டுகள்.

அமைதியாக இருங்க
இந்த பலங்களை அவர்கள் சரியான இடத்தில், சரியான தருணத்தில் வெளிப்படுத்தி வெற்றியடைகிறார்கள். அந்த உத்திகளை நாம் பயின்றுகொள்ள வேண்டும். இயலாவிட்டால் நம் பாணியில் அமைதியாகத் தொடரவேண்டும். எனக்கு வேகமாக ஓடும் திறமை இருக்கவேண்டும், அல்லது அதை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தப்பானவன் தானே
என்னை விட வேகமாக ஓடக்கூடியவனை நான் எப்படிக் குற்றப்படுத்த முடியும்? குறுக்கே வந்து இடைமறிப்பவனையோ, தள்ளிவிட்டு ஓடுபவனைப் பற்றியோ நான் பேசவில்லை. அவன் யாரயிருந்தாலும் தப்பானவன்தானே?" என்று தெரிவித்து உள்ளார். நேற்று பேஸ்புக்கில் ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட பதிவில், பிராமணர் என்பதற்காக அவர்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான் என்று அவர்களுக்கு ஆதரவாக பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications