இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு.. தற்குறிகளின் வேலையா? காட்டமான ‘போஸ்ட்'
சென்னை: சென்னையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் அவர் சாப்பிட்டு கொண்டிருந்த சமயத்தில் யாரோ அவரது கார் கண்ணாடியை உடைத்து விட்டு சென்றுள்ளனர். நடிகர் விஜயின் அரசியல் வருகையை ஜேம்ஸ் வசந்தன் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் கோபமான ஜேம்ஸ் வசந்தன் போலீசில் புகார் செய்துள்ளதோடு, ''தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை'' என பேஸ்புக்கில் காட்டமாக பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜேம்ஸ் வசந்தன். மேலும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும், தொகுப்பாளராகவும் உள்ளார். ஜேம்ஸ் வசந்தன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தான் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஜேம்ஸ் வசந்தன் சென்னை கொட்டவாக்கத்தில் உள்ள உணவகத்துக்கு சாப்பிட சென்றார். காரை வெளியே நிறுத்திவிட்டு ஜேம்ஸ் வசந்தன் உணவகம் உள்ளே சென்றார்.
உணவகத்தில் சாப்பிட்டு விட்டு ஜேம்ஸ் வசந்தன் வெளியே வந்தார். அப்போது அவரது காரின் பின்பக்க இருக்கையின் அருகே உள்ள விண்டோவின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து ஜேம்ஸ் வசந்தன் அதிர்ச்சியடைந்தார். கார் கண்ணாடியை உடைத்தது யார்? என்பது தெரியவில்லை.
இதுபற்றி ஜேம்ஸ் வசந்தன் நீலாங்கரை போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க
ஜேம்ஸ் வசந்தனன் கண்ணாடி உடைக்கப்பட்ட தனது காரின் வீடியோவை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த பதிவில், ''தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை. இன்று மதியம் நான் ஒரு உணகவத்திற்கு சாப்பிடச் சென்றபோது.. '' என கூறியுள்ளார். இதன்மூலம் அவர் விஜயின் தவெகவினர் மீது சந்தேகம் கிளப்பி உள்ளார். ஏனென்றால் விஜயின் தவெகவினரை எதிர்க்கட்சியினர் தற்குறிகள் என விமர்சனம் செய்து வருகின்றனர். இப்போது ஜேம்ஸ் வசந்தன் அந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்.
அதுமட்டுமின்றி சமீபகாலமாக ஜேம்ஸ் வசந்தன் அரசியல் சார்ந்த கருத்துகளை பேசி வருகிறார். குறிப்பாக விஜயின் அரசியல் வருகை மற்றும் தவெகவினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அடிக்கடி ஜேம்ஸ் வசந்தனின் பேட்டி தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் பரவி வருகிறது. இதனால் ஜேம்ஸ் வசந்தனை தவெகவினர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படியான சூழலில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதால் பின்னணியில் தவெகவை சேர்ந்தவர்கள் இருக்கலாமா? என்ற சந்தேகத்தை அவர் எழுப்பி உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications