சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.. புலம்பும் தவெக இஸ்லாமியர்கள்.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக அமைச்சரவையில் இஸ்லாமியர்கள் இருந்தாலும், கட்சியில் இஸ்லாமியர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று அக்கட்சியில் இருக்கும் இஸ்லாமிய புள்ளிகள் புலம்ப தொடங்கி உள்ளனர். எந்தவொரு வாரியத் தலைவர் பதவி கூட இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்படவில்லையே என்று பேச்சு அதிகரித்துள்ளது.

தவெக அமைச்சரவையில் பர்வேஸ் மற்றும் ஐயூஎம்எல் ஷாஜகான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழக அமைச்சரவையில் ஐயூஎம்எல் இடம்பெற்றது அக்கட்சியினர் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனால் இஸ்லாமியர்களுக்கு தவெகவில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அச்சமூக மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.

Muslims TVK Vijay

அதற்கேற்ப சிறுபான்மையினர் தவெக பக்கம் வந்துவிட்டனர் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மேடைதோறும் பேசி வந்தார். ஆனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இஸ்லாமியர்கள் திமுகவுக்கு கணிசமாக வாக்களித்தனர். அரசு ஊழியர்களின் வாக்குகளிலும் திமுக முதலிடத்தை பிடித்தது தவெக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே இஸ்லாமியர்களுக்கு தவெகவில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குரல் அதிகரித்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பின் வாரியத் தலைவர் பதவி கூடுதலாக இஸ்லாமியர்களுக்கு கிடைக்கும் என்று நம்பி இருந்தனர். ஆனால் தவெக அதனை கண்டுகொள்ளவில்லை. அதேபோல் அரசு வழக்கறிஞர் நியமனங்களிலும் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

தவெகவில் இஸ்லாமியர்களுக்கு பெரிய பொறுப்பு அளிக்கப்படவில்லை. அப்போதே இஸ்லாமியர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனிடையே மதுரையில் தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் இஸ்லாமியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஆனால் முஸ்தபா, நான் கட்சியை கலைத்துவிட்டு தவெகவில் இணைந்தேன். எனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.

என்னையே தவெக தலைமை கண்டுகொள்ளவில்லை என்று புலம்பி இருக்கிறார். இதனால் திமுக ஆட்சியின் போது இஸ்லாமியர்களுக்கு கிடைத்த முக்கியத்துவம் கூட தவெக ஆட்சியில் கிடைப்பதில்லை என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளது. முஸ்தபா மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளையும் தவெக கட்சியிலும் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் குரல்கள் அதிகரித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+