இஸ்லாமிய ஆண்கள் முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் 2ம் திருமணத்தை பதிவு செய்ய முடியாது: கேரள ஐகோர்ட்
சென்னை: ஒரு இஸ்லாமிய ஆண் முதல் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், 2வது திருமணத்தை செய்துள்ளார்.. ஆனால், இந்த திருமணத்தை பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.. உடனே அந்த இஸ்லாமிய கணவர், கோர்ட்டுக்கு ஓடினார்.. கேரள உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் சொல்லியிருக்கும் தீர்ப்பானது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தெலுங்கானாவின் ஹைதராபாத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி, மத சம்பிரதாயத்தின்படி, "கூலா" எனப்படும் விவாகரத்தினை அறிவித்தார்.

இதை ஏற்க மறுத்த பெண்ணின் கணவர், இது தொடர்பாக திருமண பிரச்னைகளுக்கு சமரசம் செய்யும் முஸ்லிம்களுக்கான சமூக நல அமைப்பான சதா -- இ -- ஹக் - ஷராய் கவுன்சிலை நாடினார். மனைவி கோரியபடியே விவாகரத்துக்கான சான்றிதழை அந்த அமைப்பும் வழங்கியது.
விவாகரத்து கேட்ட மனைவி
உடனே அதனை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் முறையிட்டார். அங்கும் கணவரின் மனு நிராகரிக்கப்பட்டது.. உடனே இதை எதிர்த்து தெலுங்கானா ஹைகோர்ட்டுக்கு ஓடினார்..
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு இஸ்லாமிய பெண், விவாகரத்துக்கான, 'கூலா' அறிவிப்பை வெளியிடுவது, அவரின் தனிப்பட்ட உரிமை. இஸ்லாமிய சட்டத்தின் கீழ், மனைவி ஒருதலைபட்சமாக கூலா வாயிலாக தன் திருமணத்தை கலைக்க முடியும்.
இதற்கு கணவரின் ஒப்புதலோ அல்லது முப்தி அல்லது தார் -- உல் -- காசாவால் கூலானாமா வழங்குவதோ அவசியமில்லை. அத்தகைய அமைப்புகள், பெண் அல்லது ஆணுக்கு திருமணம் தொடர்பான ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும். இருவரின் உரிமையில் தலையிட முடியாது.
அதேபோல், குடும்ப நல நீதிமன்றங்களின் பங்கு, கூலாவுக்கான கோரிக்கையை சரிபார்ப்பது, சமரச முயற்சியை உறுதி செய்வது ஆகும்.
இஸ்லாமிய கணவர்
அவசியம் ஏற்பட்டால், திருமணத்துக்கான வரதட்சணையை பெண் திருப்பித்தர தயாராக இருக்கிறாரா என்பதை உறுதி செய்யலாம். இந்த நடைமுறை விசாரணையாக மாறக்கூடாது. திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் முத்திரையை இடுவதுதான் நீதிமன்றத்தின் ஒரே பங்காக இருக்க முடியும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.. இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 2-வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள்.. கேரளாவில் என்ன நடந்தது?
இரண்டாவது கல்யாணம்
கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த அந்த இஸ்லாமியர் நபருக்கு 44 வயதாகிறது.. திருமணமான இவர், 38 வயது பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், முதல் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், 2வது திருமணத்தை பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.. உடனே இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டை நாடினார் இஸ்லாமிய கணவர்.
தன்னுடைய மனுவில், "இஸ்லாமிய சட்டத்தின்படிஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்ய அனுமதி உள்ளதால், தன்னுடைய 2-வது திருமணத்தை பதிவு செய்ய அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கானது நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள், "இஸ்லாமிய ஆண்கள் முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் 2வது திருமணத்தை பதிவு செய்ய முடியாது.. இரண்டாவது திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, முதல் மனைவியின் கருத்தை கேட்க வேண்டியது கட்டாயம்.
அடிப்படை உரிமைகள் முக்கியம்
ஒருவேளை இரண்டாவது திருமணத்துக்கு முதல் மனைவி எதிர்ப்பு தெரிவித்தால், அந்த திருமணத்தை பதிவு செய்யக்கூடாது.. அடிப்படை உரிமைகள் என்பது, மத உரிமைகளைவிட முக்கியமானவை.. இரண்டாவது திருமணத்தை எதிர்க்கும் பெண்களின் கருத்தையும் நாம் புறக்கணிக்க முடியாது.
இஸ்லாமிய சட்டத்தின்படி பார்த்தாலும், ஒரு ஆண் 2வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. முதல் மனைவியின் சம்மதம் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை திருக்குரானோ அல்லது இஸ்லாமிய சட்டங்களோ அனுமதிக்கவில்லை..
ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை சமமாக நடத்த முடிந்தால் மட்டுமே ஒருவர் அவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இஸ்லாமிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளன..
முதல் மனைவி வெறும் பார்வையாளரா?
எனவே, ஒரு இஸ்லாமிய பெண் தன்னுடைய கணவரின் இரண்டாவது திருமணத்தில் வெறும் பார்வையாளராக அமைதியாக இருப்பதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
மேலும், மனுதாரர் தாக்கல் செய்த வழக்கில் அவரது முதல் மனைவியின் தரப்பு சேர்க்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி, கணவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
காங்கிரஸ் வென்றால் இவர் தான் முதல்வர்.. கேரளாவில் "கை"க்கு எழுச்சியை கொடுத்த சதீசன்.. யார் இவர்? -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications