மதமென பிரிந்தது போதும்.. சென்னை சர்ச்சில் ரம்ஜான் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை.. இதுதான் தமிழ்நாடு!
சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னை ராயப்பேட்டை தேவாலயத்தில் இன்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். ஒரு மாதம் வரை நோன்பு இருந்து இஸ்லாமியர்கள் ரம்ஜானை கொண்டாடுவார்கள். மேலும் இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு இருப்பது. இதனால் ரம்ஜான் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக உள்ளது.

இந்த பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் தங்களின் புனித மாதமான ரமலானில் நோன்பை கடைப்பிடிப்பார்கள். ஒரு மாதம் வரை இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சாயங்காலம் வரை உணவு உண்பதை தவிர்த்து உடலை வருத்தி நோன்பு இருப்பார்கள்.
இந்த காலக்கட்டத்தில் அதிகாலையில் அவர்கள் எடுத்து கொள்ளும் உணவு சஹர் என அழைக்கப்படும். அதன்பிறகு மாலையில் நோன்பு திறப்பதை இப்தார் என்பார்கள். இந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பிறை பார்க்கப்பட்டது. இதையடுத்து இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஈத்கா மைதானங்ளில் ஏராளமானவர்கள் குவிந்து தொழுகை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள தேவாலயத்தில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையை மேற்கொண்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் புனித காணிக்கை அன்னை தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தின் வளாகத்தில் இன்று காலை இஸ்லாமியர்கள் கூடி சிறப்பு தொழுகை நடத்தி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். சமீபகாலமாக நாட்டில் சில இடங்களில் மதம் சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது. இத்தகைய சூழலில் தான் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காணிக்கை அன்னை தேவாலயத்தில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications