முஸ்தபா விடலையே.. உதயநிதியின் அமரன் படத்தை திமுக ஏன் கண்டிக்கல? சிவகார்த்திகேயன் பாஜக கிட்ட ஓடினாரே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் குழு எடுத்த அமரன் படத்தில் எப்படி வந்து பார்த்தீர்கள் என்றால், முஸ்லிம்களை அப்படியே வேறுவிதமாகக் காட்டிவிட்டார்களா? இஸ்லாமியர்களை அப்படியே வல்லரசாக மாற்றியது போன்றா காண்பித்தார்கள்? இல்லையே? அமரன் படத்தில் ஏன் அன்றைக்கு இருக்கக்கூடிய திமுக அரசாங்கம் அமரன் படத்தைக் கண்டிக்கவில்லை? அப்பொழுது தெரியவில்லையா உங்களுக்கு?" என்று தவெக எம்எல்ஏ முஸ்தபா கேள்வி எழுப்பி உள்ளார்.

4 நாட்களுக்கு முன்பு தவெக எம்எல்ஏ முஸ்தபா பேரவையில் பேசும்போது, 1999-ல் இஸ்லாமிய மக்கள் அடைந்த பாதிப்புகளைக் கூறி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அப்போது சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றார்.

ஆனாலும், "திமுகவினர் எங்களை 5 முறை முஸ்லீம் தீவிரவாதிகள்" என்று பேசுகிறார்கள். அதற்கான ஆதாரங்கள் உள்ளதாக முஸ்தபா மீண்டும் ஆவேசமாக கூறினார்..

TVK MLA Mastan speaking about Amaran movie controversy

முஸ்தபா பேச்சு

முஸ்தபாவின் இந்த கருத்துக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.. அவையில் கூச்சல், எதிர்ப்பு குரல்கள். வாக்குவாதம் வெடித்தன.. திருவாரூர் திமுக எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் சபாநாயகர் இருக்கைக்கு அருகிலேயே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்..

“இஸ்லாமியருக்கு 3.5% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு திமுக தான். தேவையில்லாத பதிவுகளை சட்டமன்றத்தில் பதிவு செய்யக்கூடாது” என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தவெகவுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். சிறுபான்மையினர் நலனுக்காக கலைஞர் கருணாநிதி, என்னவெல்லாம் திட்டங்களையும், சலுகைகளையும் வெளியிட்டார் என்று முரசொலியில் நீண்ட தலையங்கமே வெளியிட்டிருந்தது.

தவெக எம்எல்ஏ குற்றச்சாட்டு

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பி உள்ளது.. தவெக எம்எல்ஏ முஸ்தபா இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "முதல்வர் விஜய் குறித்து நான் பேசியதாக வெளியான வீடியோ தவறாக திரித்து கூறப்படுகிறது.. நாங்கள் அந்த காட்சிகளை நீக்க வேண்டு தான் கேட்டோம்.. ஆனால், வீடியோக்களை இணைத்து இப்போது திமுக ஐடி விங் ஒளிபரப்புகிறார்களே, அதெல்லாம் எப்படி சார்? இது முற்றிலும் உண்மைக்குப் புறமான செய்தி.

அதில் இருக்கக்கூடிய காட்சியை நீக்க வேண்டும் என்றுதான் நாம் அந்த இடத்தில் வலியுறுத்தினோம். அந்த காட்சியை மாண்புமிகு முதலமைச்சர் தாய் உள்ளம் கொண்டு அந்த காட்சியை நீக்கிவிட்டு அந்தப் படத்தை வெளியிட்டார். இது எல்லாமே இயல்பாக நடப்பதுதான். இப்படித்தான் விஸ்வரூபம் படத்துக்கும் கேட்டோம், காட்சியை நீக்கிவிட்டு வெளியிடுங்கள் என்று சொல்லி, அது மாதிரி இந்த படத்திற்கும் கேட்டோம்..

உதயநிதி ஸ்டாலின் குழு எடுத்த அமரன்

உதயநிதி ஸ்டாலின் குழு எடுத்த அமரன் படத்தில் எப்படி வந்து பார்த்தீர்கள் என்றால், முஸ்லிம்களை அப்படியே வேறுவிதமாகக் காட்டிவிட்டார்களா? இஸ்லாமியர்களை அப்படியே வல்லரசாக மாற்றியது போன்றா காண்பித்தார்கள்? இல்லையே? அமரன் படத்தில் ஏன் அன்றைக்கு இருக்கக்கூடிய திமுக அரசாங்கம் அமரன் படத்தைக் கண்டிக்கவில்லை? அப்பொழுது தெரியவில்லையா உங்களுக்கு?

நீங்கள் அமரன் படத்தில் நடித்த, ரெடின் மூவிஸ் படம் தயாரித்த சிவகார்த்திகேயன், பாஜகவின் பாதுகாப்புத்துறை அமைச்சரை பார்த்தாரே... சிவகார்த்திகேயன் இருப்பது ஏதோ ஒரு தமிழ்நாட்டில் ஒரு எல்லை, அப்பொழுது யாருடைய தயவில் போய் பாதுகாப்புத்துறை அமைச்சரை பார்த்தார்? திமுகவின் தயவில்தான் பார்த்தார். எனவே முழுக்க முழுக்க இஸ்லாமிய மக்களை கேவலப்படுத்துவது திமுக..இஸ்லாமிய மக்களை கொச்சைப்படுத்துவது திமுக.

திமுகவின் இரட்டை நாடகம்

நாங்கள் வந்து மூன்றரை சதவீதம் கொடுத்துவிட்டோம், அரசியல் கொடுத்துவிட்டோம் எல்லாமே கொடுத்தீர்கள் என்கிறீர்களே... தமிழ்நாட்டில் என்ஐஏ சட்டம் எப்படி யார் கொண்டு வந்தார்கள்? யாருக்கு யார் கையெழுத்து போட்டுக் தமிழ்நாட்டிற்கு வந்தது இந்த கருப்பு சட்டம்? சிறைவாசிகளை விடுதலை செய்கிறோம் என்று ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறீர்கள்.. பிறகு இவர்கள் வெளியே வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து என்று கூறி, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்கிறது திமுக

1999 மார்ச் 23, காலை 11.40 மணிக்கு ஆலடி அருணா வைத்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினீர்கள்.. அப்போது நாங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டோம்? புதுப்பேட்டை, டிரிப்ளிகேன், முஸ்லிம்கள்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளில் நடுராத்திரி கதவை தட்டவில்லையா? பள்ளிவாசல்களில் ஷூ போட்டுக்கொண்டு உள்ளே போகவில்லையா?

திமுக முகத்திரையை கிழிக்கிறோம்

இவ்வளவு இன்னல்களை செய்துவிட்டு, என்ஐஏ சட்டத்தையும் கொண்டு வந்துள்ளார்கள்.. ரோஷன் சூடு, சொரணை, திமுகவுக்கு உள்ளதா? பாஜகவில் தாமரை வாழ்க என்று சொனன்தே திமுகதானே? பாஜக அமைச்சரவையிலும் இடம் பெற்றது திமுகதானே? மோடி பார்ட்டில் கனிமொழி கலந்து கொண்டுள்ளாரே? அப்போது மட்டும் மோடி பூச்சாண்டி, பாஜக பூச்சாண்டி என்று தெரியவில்லையா?

இரட்டை வேடம் போடுகிறது திமுக.. முகத்திரையை கிழிக்கவும், திமுகவுக்கு கோபம் வருகிறது.. அதனால்தான், சிறுபான்மையினர் காவலர்கள் நாங்கள் என்று சொல்லி கொள்கிறார்கள்.. உண்மையிலேயே சிறுபான்மையினர் நலனுக்காக உள்ளவர் தவெக தலைவர் தளபதிதான்.. ஹிஜ் மானியத்துக்கு 35 லட்சம் தந்துள்ளார்..

சிறுபான்மையினர் காவலனாகவும் உள்ளவர் தளபதிதான். இதை நாங்கள் சொன்னால் திமுகவுக்கு கோபம் வருகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+