முத்து முத்தான முத்தரையரின் ஓட்டு மொத்தமா அங்கே போகுதா? திமுக, அதிமுக நடுவுல ஒருத்தர் வந்துட்டாரே
சென்னை: தேர்தல் நெருங்கி வருகிறது... தமிழக அரசியலில் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது... இந்நிலையில், அனைத்து சமூக மக்களின் ஓட்டுக்களை பெறும் முயற்சியில் அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.. அந்தவகையில், முத்தரையர் ஓட்டு யாருக்கு செல்கிறது என்பதிலும் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது... இதுகுறித்து இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழகத்தில் சில மாவட்டங்களில், குறிப்பாக தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, பெரம்பலூர் பகுதிகளில் முத்தரையர் சமுதாய மக்கள் அரசியல் வாக்குகளில் முக்கிய சக்தியாக விளங்கி கொண்டிருக்கிறார்கள்..

சுமார் 30 சட்டசபை தொகுதிகளில், யார் வெற்றி பெறுவார் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு முத்தரையர் வாக்குகள் எடுப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் மட்டும் 5.38 லட்சம் வாக்குகள் முத்தரையர் சமூகத்திற்கு உள்ளதாக தெரிகிறது... இதேபோல் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, வேலூர் பகுதிகளிலும் முத்தரையர் வாக்கு கணிசமாக உள்ளது.
எம்ஜிஆர் - பெரும் ஆதரவு
எம்ஜிஆர் காலத்தில் முத்தரையர் வாக்குகள் அப்படியே லட்டு போல அதிமுகவுக்கு போய்விடுமாம்.. அந்த அளவுக்கு எம்ஜிஆர் மீது முத்தரையர் சமூகம் பிரியமாக இருந்துள்ளது.. பிறகு வந்த ஜெயலலிதா, அச்சமூகத்தினரின் ஆதரவை சிந்தாமல் சிதறாமல் அதிமுகவுக்கே தக்க வைத்து, கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக்கினார்..
ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்வராகி, அதிமுகவில் முத்தரையர் செல்வாக்கு மெல்ல மெல்ல குறைந்தது. எனவேதான் அதிமுக தற்போதைய தேர்தலில் அதை மீட்டெடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதிமுக எடப்பாடி பழனிசாமி
எனவேதான், கடந்த மே மாதம் பெரும்பிடுகு முத்தரையர் 1350வது சதய விழாவை, சிறப்பாக கொண்டாட, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.. அதுமட்டுமல்ல, வரும் தேர்தலில் தஞ்சை தொகுதிக்கு முக்கியத்துவம் தரும்வகையில் தேர்தல் சீட் ஒதுக்கீடுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பழைய செல்வாக்கை மீட்டெடுக்க, தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் முக்கிய பதவிகள் வழங்குவதற்கும், சமூக தலைவர்களுடன் தொடர்பை வலுப்படுத்துவதற்கும் முனைப்பை காட்டி வருகிறது..
திமுக முத்தரையர் வாக்குகள்
அதேபோல திமுகவை எடுத்துக் கொண்டால், முத்தரையர் சமுதாய தலைவர்களை வளைக்கும் வேலைகளில் ஈடுபட்டும், தலைவர் கருணாநிதியால் அப்போது முழு பலனை எட்ட முடியவில்லை.. ஜெயலலிதா இருக்கும் வரை, அவரது முயற்சி தோல்வியையே சந்தித்தது..
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில்தான் முத்தரையர் ஆதரவை பெருக்க முதல்வர் ஸ்டாலின் பலவிதமான அதிரடிகளை கையில் எடுத்தார்..
குறிப்பாக, பெரும்பிடுகு முத்தரையர் நினைவு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினார்...
தவெக விஜய்
ஆலங்குடி தொகுதியில் வென்ற முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த மெய்யநாதனுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 90 சதவீதம் முத்தரையர் பெண்கள் பயனாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, சமூகத்தில் திமுக செல்வாக்கு பெரிதாக அதிகரித்துள்ளது.
இதற்கு நடுவில், தவெக தலைவர் விஜய் முத்தரையர் சமூக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. பெரும்பிடுகு முத்தரையில் சதயவிழாவில், தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த், இதுவரை 2 முறை கலந்து கொண்டு மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருந்ததையும் இங்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.
அதிமுக, திமுக
இப்படிப்பட்ட சூழலில், உளவுத்துறை மற்றும் தனியார் ஏஜன்சிகள் சமீபத்தில் சர்வேக்களை எடுத்துள்ளன.. அதில் திமுகவுக்கு 50-55%, அதிமுகக்கு 30-35%, தவெகவுக்கு 7-10%, நாதகவுக்கு 3-3.5% என்று அந்த சர்வே தெரிவித்துள்ளதாம்.. இது திமுக தரப்புக்கு குஷியை தந்து வருகிறது..
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் முத்தரையர் ஓட்டுகள் பெரும்பாலும் திமுகவிற்கு மாறும் வாய்ப்பு அதிகம் என்று சர்வே முதல் நிபுணர்கள் வரை கூறுகிறார்கள்.. எனினும்,. அரசியல் களம் என்பது எந்நேரமும் மாறக்கூடியது என்பதால், அதிமுக, திமுக, தவெக என இவர்களில் யாருக்கு முத்தரையர் சமூக ஓட்டுகள் கிடைக்க போகின்றன? பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ












Click it and Unblock the Notifications