அட.. இது நம்ம முத்தரசனா? இளமை தோற்றத்தில் பட்டையைக் கிளப்புறாரே.. சினிமாவுக்கு வந்த அரசியல்வாதி!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நடிப்பில் உருவாகும் 'அரிசி' திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விக் வைத்து டை அடித்து இளமைத் தோற்றத்தில் முத்தரசன் இருக்கும் போட்டோக்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், இரா.முத்தரசன் விவசாயியாக நடிக்கும் திரைப்படம் 'அரிசி'. இந்தப் படத்தில், அவரது மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். இவர்களுடன் சிசர் மனோகர், கோவி இளங்கோ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஜான்சன் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் எடிட்டிங் செய்கிறார். இந்த படத்தை எஸ்.ஏ.விஜயகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரா.முத்தரசன், விவசாய தொழிலாளர் சங்கத்தில் பல வருடங்களாக பொறுப்பில் இருந்தவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளுக்காக ஓங்கி குரல் எழுப்பி வருபவர். இந்நிலையில், விவசாயத்தை மையப்படுத்திய திரைப்படத்தில், அவரே விவசாயியாக நடித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'அரிசி' படத்தில் விவசாயியாக நடிக்கும் முத்தரசன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மண்வெட்டி பிடித்திருப்பது போலவும், நெல் மூட்டைகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போலவுமான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அத்துடன் முத்தரசன் டை அடித்து, இளமையாக இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
'அரிசி' படம் குறித்து இந்தப் படத்தின் இயக்குனர் விஜயகுமார் கூறுகையில், "அரிசி படம் முழுக்க முழுக்க விவசாய பின்னணியில் உருவாகும் படம். அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல, மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதனை இந்தத் தலைமுறைக்கு எடுத்து சொல்வதே இந்த 'அரிசி' படத்தின் சிறப்பு.

இப்படத்தில் விவசாயியாக நடித்திருக்கும் தோழர் முத்தரசன் பேசுவதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வசனங்களும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் குடவாசல் அருகே உள்ள சிறு சிறு கிராமங்களில் 35 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. அப்பகுதி விவசாயிகளும் இந்தஒ படத்தில் நடித்திருக்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி, விஜயகாந்த், சீமான், கமல்ஹாசன் என பல நடிகர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளனர். அரசியல் தலைவர்களான பிறகு சிலரும் சினிமாவில் நடித்துள்ளனர். இந்நிலையில், கள அரசியல் போராளியான முத்தரசன் சினிமாவில் நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications