விஜய் பார்வையில் முத்துராமலிங்கத்தேவர் பெரிய தலைவர் இல்லை.. கொளுத்திப்போட்ட முத்து ரமேஷ்
சென்னை: நடிகர் விஜய்யின் பார்வையில் முத்துராமலிங்கத்தேவர் மிகப்பெரிய அரசியல் தலைவர் இல்லை என்று தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேஷ் கூறியுள்ளார். அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தலைவர் என்றும் முத்து ரமேஷ் கூறியுள்ளார். நமது ஒன் இந்தியா அரசியல் யூடுயூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேஷ்.
நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசும் பேசும் பெரியார், காமராஜர், அம்பேத்கர் பற்றி பேசியுள்ளார். தேவரைப்பற்றி ஏன் பேசவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதற்கு பதில் அளித்துள்ள முத்து ரமேஷ், காமராஜர் ஒரு சாதியத்தலைவர் இல்லை. 54 சதவிகித மக்கள் காமராஜர் ஆட்சிக்குத்தான் வாக்களிக்கிறார்கள். 20 சதவிகிதம் முதல் 30 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்று விஜய் நினைக்கிறார். நாடார்கள் வாக்குகள் 9 சதவிகிதம் உள்ளது. காமராஜரைப் போல தூய்மையான ஆட்சியை தர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாடார்கள் வாக்குகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்களின் வாக்குகளும் கிடைக்கும். ஒரு தமிழர் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது அவரை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை.
காமராஜரைப் பற்றி விஜய் பேசியதை நீங்கள் பெருமையாக நினைக்கலாம். இந்த பட்டியலில் தேவரை ஏன் விஜய் குறிப்பிடவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதென்ன காமராஜர் பற்றி மட்டும் சொல்கின்றனர் தேவரைப் பற்றியும் விஜய் சொல்லலாமே என்று பலரும் கேள்வி கேட்கின்றனர். தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நடிகர் விஜய்யை விமர்சனம் செய்கின்றனர்.

ஒரு தலைவரின் உயரம் என்ன என்பதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். எந்த தலைவரும் சின்னத்தலைவர் பெரிய தலைவர் என்று இல்லை, அவர் செய்த சாதனைதான் பேசப்படும். அவர் மக்களுக்கு செய்த தொண்டு என்ன என்பதைப் பொறுத்துதான் ஆளுமையை நாம் அறிய முடியும். இந்தியா அளவில் காமராஜருடன் ஒப்பிடக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை. நடிகர் விஜய் பார்வையில் முத்துராமலிங்கத்தேவர் பெரிய தலைவர் இல்லை. அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு சமூகத்தலைவர் என்றும் தெரிவித்தார். மக்கள் ஆதரவு இல்லாத தலைவர் என்றும் அவரது சாதி சமூக மக்கள் வாழ்ந்த பகுதிகளில் மட்டுமே ஜெயித்த தலைவர் அப்படிப்பட்ட தலைவரை விஜய் ஏன் பேச வேண்டும் என்று அவர்கள் சிந்தித்து இருக்கலாம் என்றும் கூறினார் முத்து ரமேஷ்.
பிரதமர் மோடி பசும்பொன் வரப்போவதாக கூறப்படும் நிலையில் நீங்களோ காமராஜருடன் கூட தேவரை ஒப்பிட வேண்டாம் என்று கூறுவது சரியா என்ற கேள்வியை முன் வைத்தோம். அதற்கு பதில் அளித்த முத்து ரமேஷ், அவருடைய மொத்த மக்கள் செல்வாக்கு 3 தொகுதிதான். காமராஜர் முதல்வராக இருந்தவர் 9 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு அவரே பதவியை விட்டு விலகினார். கட்சிப்பணியாற்ற முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 52 சதவிகித வாக்குகள் பெற்ற காமராஜருடன் 1.5 சதவிகித வாக்குகள் பெற்ற முத்துராமலிங்கத்தேவருடன் ஒப்பிடுவது நியாயமா என்றும் கேட்கிறார் முத்து ரமேஷ்.
தேவர் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட தலைவர். அவரைப்போய் தேசிய தலைவரான காமராஜருடன் ஒப்பிடக்கூடாது. நாட்டு சுதந்திரத்திற்காக பாடு பட்டதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய தலைவர் தமிழ்நாட்டில் 4 முதலமைச்சர்களை உருவாக்கிய தலைவர் காமராஜர். அவரோடு சமுதாய தலைவரான முத்துராமலிங்கத்தேவரை ஒப்பிடக்கூடாது என்றும் முத்து ரமேஷ் கூறியுள்ளார்.
-
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications