164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்
சென்னை: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் எப்போதுமே முதல்வர் ஸ்டாலின் பெயர் முதலில் வரும் என்று எதிர்பார்த்தார்கள். அப்படிவரவில்லை.. அதேபோல் கும்மிடிப்பூண்டியில் ஆரம்பித்து கன்னியாகுமரியில் முடியும் என்று நினைத்தார்கள்.. அப்படியும் இல்லை. அதேநேரம் கன்னியாகுமரியில் ஆரம்பித்து கடைசியாக முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வேட்பாளர் பட்டியல் முடிந்துள்ளது.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கான இடப்பங்கீட்டு விவரங்களை திமுக இன்று வெளியிட்டுள்ளது, இதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மொத்த தொகுதிகள் 175 ஆகும்.இந்த முறை திமுக தனது கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட அறிவுறுத்தியுள்ளது. திமுக நேரடியாக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

கூட்டணிக் கட்சிகளை பொறுத்தவரை மதிமுக 3 தொகுதிகள் (மொத்தம் 4 இடங்களில், 3 இடங்களில் உதயசூரியன் சின்னம்).
கொமதேக : 2 தொகுதிகள்.
மமக : 2 தொகுதிகள்.
SDPI: 1 தொகுதி.
மனிதநேய ஜனநாயக கட்சி : 1 தொகுதி.
முக்குலத்தோர் புலிப்படை: 1 தொகுதி.
தமிழர் தேசம் கட்சி: 1 தொகுதி ஆகியவை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
திமுகவின் 164 தொகுதிவேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.இதில் முதல்வர் ஸ்டாலின் பெயர் தான் முதலில் இருக்கும் என திமுகவினர் நினைத்தனர். ஆனால் அந்த பட்டியலில் கடைசி பெயராக அதாவது 164 வது பெயராக ஸ்டாலின் பெயர் இடம் பெற்றுள்ளது. முதல் தொகுதியாக கன்னியாகுமரி இருக்கிறது.
கன்னியாகுமரியில் ஆரம்பித்து, திருநெல்வேலி, விருதுநகர் , மதுரை , சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை என அப்படியே கூகுள் மேப் போல் ஆரம்பித்து கடைசியாக சென்னைக்கு வருகிறது பட்டியல். சென்னை வேட்பாளர்கள் பட்டியலில் கடைசியாக 164 தொகுதியாக கொளத்தூர் இருக்கிறது.

அதன்வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் 4வது முறையாக போட்டியிடுகிறார். 2011ல் தொகுதி உருவானதில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் தான் வெற்றி பெற்று வருகிறார். அதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.
இந்த முறை திமுகவின் 164 வேட்பாளர்கள் பட்டியலில் சுமார் 60-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இளைஞர்களுக்கும், கட்சிப் பணிகளில் தீவிரமாக இருந்த புதியவர்களுக்கும் இந்த முறை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம்














Click it and Unblock the Notifications