இதயம் நொறுங்கி விட்டது - வடிவேல் பாலாஜியின் மரணத்திற்கு நடிகர்கள் கண்ணீர் அஞ்சலி
நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணம் பல நடிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை: நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவருடன் சின்னத்திரையில் பல ஆண்டுகாலம் பயணம் செய்த கலைஞர்கள் தங்களின் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
வடிவேல் பாலாஜி சிறந்த மிமிக்ரி கலைஞர், மதுரையில் பிறந்து வடிவேல் போலவே சினிமாவில் காமெடியனாக வலம் வரவேண்டும் என்ற ஆசையில சின்னத்திரையில் நுழைந்து சினிமாவிலும் அறிமுகமானவர். அனைவரையும் சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி இப்படி திடீரென்று மரணமடைந்து விட்டாரே என்று பலரும் அதிர்ச்சியுடன் கூறி வருகின்றனர்.
வடிவேல் பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் இருக்கிறார்கள். கலக்கப் போவது யாரு, அது இது எது என பல நிகழ்ச்சிகளில் அனைவரையும் சிரிக்க வைத்தவர் வடிவேல் பாலாஜி. அவருடன் நீண்ட காலம் பயணித்த ராமர், ரோபோ சங்கர், ஆர்த்தி, கணேஷ் என பலரும் கண்ணீர் மல்க தங்களின் சோகத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இதயம் நொறுங்கிப்போனது
நடிகர் ராமர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவருடன் வடிவேல் பாலாஜி காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். வடிவேல் பாலாஜியின் மரணச்செய்தி அவரை நிலைகுலைய வைத்துள்ளது. 20 ஆண்டு காலமாக வடிவேல் பாலாஜியுடன் பயணம் செய்திருக்கிறேன். அவருக்கு இப்படி திடீர் என்று மரணம் வரும்
என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
|
விவேக் அதிர்ச்சி
சினிமா கலைஞர்களும் தங்களின் சோகத்தை பதிவிட்டு வருகின்றனர். நடிகர் விவேக் தனது பதிவில் சின்னத் திரையில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

கலைஞர்கள் வாழ்க்கை சாதாரணமானது
வடிவேல் பாலாஜி எத்தனை பேரை சிரிக்க வைத்தார் ஏன் இப்படி ஆயிருச்சு என்று இரண்டு நாட்கள் தூக்கம் வராமல் தவித்தேன். வடிவேல் பாலாஜி வாழ்க்கை போல பல கலைஞர்கள் வாழ்க்கை சாதாரணமாகத்தான் இருக்கிறது என்று ஈரோடு மகேஷ் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அதிர்ச்சியில் ஆர்த்தி கணேஷ்
வடிவேல் பாலாஜி இறந்து விட்டார் என்ற செய்தி சில மணிநேரங்களுக்கு முன்னர் கிடைத்தது. இது என்னால் நம்மவே முடியவில்லை. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவரது பங்களிப்பு தனித்துவமாக இருக்கும். குடும்பம் குழந்தைகள் என்று சந்தோஷமாக இருந்தார். உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்ட போதே அதிர்ச்சியாக இருந்தது.பத்து நாட்களில் மரண செய்தி வந்து பேரதிர்ச்சியை தந்திருக்கிறது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
|
தாங்க முடியலை
அற்புதமான கலைஞன் வடிவேல் பாலாஜி. சின்னத்திரையில் தொடங்கி சினிமா வரை பயணம் செய்த அன்பு நண்பன் வடிவேல் பாலாஜி மரணம் அதிர்ச்சியாக இருக்கிறது. எல்லோரையும் சிரிக்க வைக்கக்கூடிய மனிதர். மரணம் இப்படி கூட வருமா என்று நினைக்க வைத்து விட்டது. திரும்ப வந்து விடுவார் என்று நினைத்தோம். பத்து நாட்களில் இந்த செய்தி கேட்டது தாங்க முடியவில்லை என்று பதிவு செய்துள்ளார்.
|
மிஸ் யூ அண்ணா
வடிவேல் பாலாஜி அண்ணா மிஸ் யூ என்று பதிவிட்டுள்ளார் ரியோ ராஜ். இவர் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்திருந்தாலும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் வடிவேல் பாலாஜியுடன் பல நிகழ்ச்சிகளை நடத்தியவர்.












Click it and Unblock the Notifications