மாபெரும் வெற்றி பெற்ற நண்பர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... ரஜினிகாந்த் ட்வீட்
சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றி உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
542 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவைப்படுகிறது. இந்தநிலையில், 300 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி கூட்டணி 85 க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

பாஜகவின் இந்த வெற்றிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான், இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதமர்களும், பிரபலங்களும் மோடிக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Respected dear @narendramodi ji
— Rajinikanth (@rajinikanth) May 23, 2019
hearty congratulations ... You made it !!! God bless.
இந்தநிலையில், பாராளுமன்ற தேர்தலில் சாதித்து விட்டீர்கள் அன்புள்ள மோடிஜி, மனம் நிறைந்த வாழ்த்துக்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று டுவிட்டரில் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நதிநீர் இணைப்பை செயல்படுத்தும் கட்சிகே தங்களது ஆதரவு என்று ரஜினிகாந்த் மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தனர். அந்த வகையில், காலையில் பாஜக 340 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றவுடனே, வாழ்த்து செய்தியை வெளியிட்டார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தமிழகத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 37 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
— Rajinikanth (@rajinikanth) May 23, 2019
இதனையடுத்து, பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications